முகப்பு /செய்தி /இந்தியா / 4 ஆண்டுகளில் இல்லாத அளவு தற்கொலை எண்ணிக்கை உயர்வு: தமிழ்நாட்டில் சோகம்

4 ஆண்டுகளில் இல்லாத அளவு தற்கொலை எண்ணிக்கை உயர்வு: தமிழ்நாட்டில் சோகம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

18 முதல் 30 வயதினர் மற்றும் 30 முதல் 45  வயதினர் இடையே தற்கொலை எண்ணிக்கை முறையே 34.5%,  31.7% ஆக உள்ளது

  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவில் நாட்டின் தற்கொலை எண்ணிக்கை  அதிகரித்துள்ளதாக 2021 தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

மத்திய  உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய குற்ற ஆவண காப்பகம் நாட்டில் உள்ள குற்ற புள்ளிவிவரங்களை சேகரித்து பகுப்பாய்வு செய்து வருகிறது. ஆண்டு தோறும் இந்தியாவில் நிகழும் குற்றங்கள்’, ‘விபத்து உயிரிழப்புகள் மற்றும் இந்தியாவில் நிகழ்ந்த தற்கொலைகள்’,  ‘இந்திய சிறைச்சாலைகள் பற்றிய புள்ளி விவரங்கள்’, காணாமல் போன பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட பிரிவுகளில் புள்ளி விவரங்களை வெளியிடுகிகிறது.

அந்த வகையில், 2021 வருட 'விபத்து உயிரிழப்புகள் மற்றும் இந்தியாவில் நிகழ்ந்த தற்கொலைகள்' தொடர்பான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், தற்கொலைகள் எண்ணிக்கை, தற்கொலை விகிதம், தற்கொலைக்கான காரணங்கள், தற்கொலை செய்து கொண்டவர்களின் சமூக பொருளாதார பின்னணி, பாலின அடிப்படையிலான தற்கொலைகல் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன

தற்கொலைகள் எண்ணிக்கை:

2021ல் மட்டும் நாட்டில் 1,64,033 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது, கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அதிக எண்ணிக்கையாகும். இதில், பெரும்பாலானோர் மகாராஷ்டிரா (22,207), தமிழ்நாடு (14,965), மத்திய பிரதேசம் (14965) ஆகிய மாநிலங்களைச் சேர்நதவர்கள்.

தமிழ்நாட்டின் தற்கொலை விகிதம் (ஒரு லட்சம் மக்கள் தொகையில் தற்கொலை எண்ணிக்கை) 26.4 ஆக உள்ளது. அதாவது, 2021ல் ஒரு லட்சம் பேரில் சராசரி 26 பேர் தற்கொலை செய்து கொண்டு மரணமடைந்துள்ளனர்.

தற்கொலைக்கு முக்கிய காரணம் குடும்ப பிரச்சனைகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த எண்ணிக்கியில் கிட்டத்தட்ட  50,000 பேர் குடும்ப பிரச்சனைகள் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 5386 பேர் குடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

18 முதல் 30 வயதினர் மற்றும் 30 முதல் 45  வயதினர் இடையே தற்கொலை எண்ணிக்கை முறையே 34.5%,  31.7% ஆக உள்ளது. அதாவது, ஒட்டுமொத்த தற்கொலை  எண்ணிக்கையில் 65% பேர் 18-45 வயதினராக உள்ளனர்.

ஒட்டுமொத்த தற்கொலை எண்ணிக்ககையில், 14%(23,179) பேர் இல்லதரசிகள். இதில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 3,221 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

பாலின அடிப்படையிலான தற்கொலை விகிதம்  72.5 (ஆண் ) : 27.4 (பெண்) ஆக உள்ளது. ஆண்களில், தினக்கூலி தொழிலாளர்களின் எண்ணிக்கை மட்டும் 37,751 ஆக உள்ளது. திருமணம் தொடர்பான பிரச்சனைகள் (வரதட்சணை கொடுமை) பெண்கள் தற்கொலையில் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் தற்கொலையில், இல்லத்தரசிகள் எண்ணிக்கை மட்டும்  23,179 ஆக உள்ளது.தமிழ்நாட்டில் மிக அதிகமாக 3,221 இல்லத்தரசிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இதையும் வாசிக்க: எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்புகளில் LGBTIQA+ மக்களை உள்ளடக்கிய பாடங்கள்: தேசிய மருத்துவ ஆணையம்

விவாசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை 10,881 ஆக உள்ளது. இதில், 5,563  விவசாய தினக் கூலிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 

தமிழ்நாடு:

குடும்ப பிரச்சனைகள் காரணமாக நிகழும் ஒட்டுமொத்த தற்கொலைகள் எண்ணிக்கை, இல்லத்தரசிகள் எண்ணிக்கை, அரசு ஊழியர்களின் தற்கொலைகள் எண்ணிக்கை, குடும்ப பெருந்தற்கொலை( Family mass suicide) எண்ணிக்கையில் தமிழ்நாடு அதிகம் பாதிக்கப்பட்டுளளதாக  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

First published:

Tags: Student Suicide, Suicide