Home /News /national /

எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்ட வெடிபொருள்களுடன் கூடிய பாகிஸ்தான் ட்ரோன் - அமர்நாத் யாத்திரைக்கு குறியா?

எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்ட வெடிபொருள்களுடன் கூடிய பாகிஸ்தான் ட்ரோன் - அமர்நாத் யாத்திரைக்கு குறியா?

சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்

சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்

இந்த ட்ரோன் தாக்குதல் அமர்நாத் யாத்திரையை குறிவைத்து நடத்தப்பட்டதாக காவல்துறை கூறுகிறது.

    ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைப் பகுதியில் வெடிபொருள்களை தூக்கி வந்த ட்ரோன்களை இந்திய பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தின் ராஜ்பாக் பகுதியில் இன்று காலை மர்மான முறையில் ட்ரோன் ஒன்று பறந்துள்ளது. காவல்துறை இந்த ட்ரோனின் இயக்கத்தை கவனித்து சந்தேகம் உறுதியானதால் அதை சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

    இது குறித்து காவல்துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், 'எல்லைப் பகுதியில் காவல்துறை வழக்கமான ஆய்வு மேற்கொண்ட நிலையில், மர்மான முறையில் ட்ரோன் ஒன்று பறந்து வந்துள்ளது. இதை கண்காணித்த காவல்துறை சந்தேகத்தை உறுதி செய்து, அதை சுட்டு வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் ட்ரோனை ஆய்வு செய்த நிலையில், அதில் வெடிபொருள்கள், கிரெனேடுகள் ஆகியவற்றை சுமந்து வந்தது தெரியவந்துள்ளது.



    இதைத் தொடர்ந்து எல்லைப் பகுதியில் உஷார் நிலையில் வைக்கப்பட்டு வான்வெளியில் ட்ரோன் நடமாட்டத்தை காவல்துறை கண்காணித்து வருகிறது' என்றார்.  கடந்த இரு ஆண்டுகளில் இது போன்று பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்து வந்த ஐந்து ட்ரோன்களை இந்திய பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியுள்ளது.

    இதையும் படிங்க: ராக்கி பாய் போல ஒரு மூச்சில் ஒரு பாக்கெட் சிகரெட் பிடித்த சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்

    இந்த ட்ரோன் தாக்குதல் அமர்நாத் யாத்திரையை குறிவைத்து நடத்தப்பட்டதாக கூறும் காவல்துறை உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை மூலம் மாபெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டதாக கூறியுள்ளது. 2022ஆம் ஆண்டு அமர்நாத் யாத்திரை ஜூன் 30ஆம் தேதி தொடங்கவுள்ளது. 43 நாள்கள் தொடங்கும் இந்த யாத்திரையானது ஜம்மு காஷ்மீரின் நுன்வாந் மற்றும் கன்தேர்பால் ஆகிய இரு வழிகளில் நடைபெறும்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Drone, Jammu and Kashmir

    அடுத்த செய்தி