Home /News /national /

ராகுல் காந்தி பார்ட்டி வீடியோ: இதெல்லாம் ஒரு வேலையா.. பாஜகவை சாடிய மஹுவா மொய்த்ரா

ராகுல் காந்தி பார்ட்டி வீடியோ: இதெல்லாம் ஒரு வேலையா.. பாஜகவை சாடிய மஹுவா மொய்த்ரா

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

அரசியல் தலைவர் ஒருவர் இரவு விடுதிக்கு செல்வது என்பது தவறில்லை. நாடாளுமன்றத்தில் ஆபாசப் படம் பார்ப்பதை விட இது மேலானதே என ராகுல் காந்திக்கு ஆதரவாக பிரபல எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின் கருத்து தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி பார்ட்டி ஒன்றில் பங்கேற்றது தொடர்பான வீடியோவை வெளியிட்டு பாஜக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் பாஜகவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி மஹுவா மொய்த்ரா  கண்டனம் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி தனிப்பட்ட சுற்றுப்பயணமாக  நேபாளம் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் பார்ட்டியில் கலந்துகொண்டது தொடர்பான வீடியோவை பாஜக ஊடக பிரிவு வெளியிட்டது. அவருடன் சீன பெண்மணி ஒருவர் இருப்பது தொடர்பாக சமூக ஊடகத்தில் விமர்சனம் எழுந்துள்ளது.

    இந்நிலையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா இது தொடர்பாக அளித்த விளக்கத்தில் ”ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி நேபாளத்துக்கு சென்றுள்ளார்.
    பிரதமர் நரேந்திர மோடி அழையா விருந்தாளியாக பாகிஸ்தானுக்குச் சென்று, அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் பிறந்த நாளைக் கொண்டாடி கேக் வெட்டியதைப் போல ராகுல் செல்லவில்லை. ஊடகவியலாளரான தனது நண்பரின் திருமணத்தில் பங்கேற்கவே ராகுல் நேபாளம் சென்றுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

    எனினும், பாஜக தரப்பில் விமர்சனம் வைக்கப்பட்டு வரும் நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்பியான மஹுவா மொய்த்ரா தனது ட்விட்டர் பக்கத்தில், ராகுல் காந்தியோ அல்லது யாரோ தனிப்பட்ட நேரத்தில் இரவு விடுதியிலோ திருமணத்திலோ கலந்துகொள்வது என்பது மற்றவர்களுக்கு முக்கியமா?



    தேநீர் கோப்பையில் பீர் அருந்தும் இரட்டை வாழ்க்கையை நடத்துகிற பா.ஜ.க-வினர், உங்கள் காரியங்களைச் சிறப்பாக செய்யுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: மத்தியப் பிரதேசத்தில் பசுக்கொலை சந்தேகத்தின் பேரில் பழங்குடியினர் இருவர் அடித்துக் கொலை


    இதேபோல் பிரபல எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின் தனது ட்விட்டர் பக்கத்தில்,  ‘அரசியல் தலைவர் ஒருவர் இரவு விடுதிக்கு செல்வது என்பது தவறில்லை. நாடாளுமன்றத்தில் ஆபாசப் படம் பார்ப்பதை விட இது மேலானதே’ என்று பதிவிட்டுள்ளார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: BJP, Congress, Rahul gandhi

    அடுத்த செய்தி