• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • இலங்கை பிரதமராக பொறுப்பேற்றார் மகிந்த ராஜபக்சே!

இலங்கை பிரதமராக பொறுப்பேற்றார் மகிந்த ராஜபக்சே!

ராஜபச்சே

ராஜபச்சே

இலங்கையில், ஆளும் கூட்டணியில் இருந்து விலகிய அதிபர் சிறிசேன, புதிய பிரதமராக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை நியமித்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையில் இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

    இலங்கையில் ஆளும் கூட்டணியில் இருந்து விலகிய அதிபர் சிறிசேனா, புதிய பிரதமராக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை நியமித்தார். வெள்ளிக்கிழமை அதிபர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பதவியேற்ற ராஜபக்சே இன்று, தனது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். பிரதமர் அலுவலகம் சென்ற அவர் தனது அலுவல் பணிகளைத் தொடங்கினார்.

    ராஜபக்சே நேற்று வெளியிட்ட அறிக்கையில், இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்றார். இதனிடையே ரணில் விக்கிரமசிங்கேவுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. 1008 காவலர்கள் அவருக்கு பாதுகாப்பு அளித்து வந்த நிலையில், அது 10 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

    ரணதுங்கா கைது: இதனிடையே துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் இறந்தது தொடர்பாக அர்ஜூனா ரணதுங்கா கைது செய்யப்பட்டுள்ளார். ரணில் விக்கிரமசிங்கே அமைச்சரவையில் பெட்ரோலியத்துறை அமைச்சராக முன்னாள் கிரிக்கெட் வீரர் அர்ஜூனா ரணதுங்கா இருந்துவந்தார். இலங்கையில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், கொழும்புவில் உள்ள சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் அலுவலகத்துக்கு ரணதுங்கா நேற்று சென்றார்.

    ரணதுங்காவுக்கு புதிய பிரதமர் ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அவரை தாக்கவும் முயற்சித்தனர். இதையடுத்து, ரணதுங்காவின் மெய்காவலர் துப்பாக்கியால் சுட்டத்தில் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்; இருவர் காயமடைந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய கொழும்பு க்ரைம் பிரிவு போலீஸார் ரணதுங்காவை இன்று கைது செய்தனர்.

    Also watch

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:DS Gopinath
    First published: