கல்வி, வேலைவாய்ப்பு போன்றவைதான் அவசியம், மனுதர்மம் தேவையில்லை - பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்..

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமையாக அதிமுக இருக்கின்றது எனவும் ,தேசிய ஜனநாயக கட்சியின் முதல்வர் வேட்பாளர் என்பது கூட்டணியில் இருக்கும் எல்லா கட்சிகளும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு எனவும்  தெரிவித்தார்.

கல்வி, வேலைவாய்ப்பு போன்றவைதான் அவசியம், மனுதர்மம் தேவையில்லை - பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்..
மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்
  • News18
  • Last Updated: October 29, 2020, 11:39 AM IST
  • Share this:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மனுதர்மத்தை வைத்து அரசியல் செய்வதாகவும், பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, பாதுகாப்பு போன்றவைதான்  அவசியமே தவிர மனுதர்மம்  தேவையில்லை என பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க மகளிரணி தேசிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள  வானதி சீனிவாசன் , கோவை தொண்டாமுத்தூரில் உள்ள தனது இல்லத்தில்     நியூஸ் 18 தமிழ்நாடு சேனலுக்கு இன்று  பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது தமிழகத்தில் இருந்து கிராம பின்னணி கொண்ட விவசாயியின் மகளுக்கு பா.ஜ.க தேசிய தலைவர் பதவியை கொடுத்து இருக்கின்றது எனவும் அர்ப்பணிப்புடன் பணி செய்தால் பொறுப்புகள்  வந்து சேரும் என்பதற்கு தனக்கு பொறுப்பு வழங்கப்பட்டது  உதாரணம் என தெரிவித்தார்.

தேசிய பொறுப்பு கொடுக்கப்பட்டாலும் தமிழகத்தில் பா.ஜ.கவை வளர்ப்பது பிரதானமாக இருக்கும் என தெரிவித்த அவர், தேசிய பொறுப்பு வழங்கப்பட்டு இருப்பது மிகப்பெரிய அங்கீகாரமாக  பார்க்கின்றேன் எனவும்  தெரிவித்தார்.தேசிய பொறுப்பு என்றால் ஹிந்தி தெரிந்து இருக்க வேண்டும், வடக்கத்திய கட்சி, குறிப்பிட்ட சாதிக்கான  கட்சி என்ற தவறாக பிறர்  சொல்லுகின்ற நிலையில் எனக்கு இந்த பதவியை வழங்கி கட்சி  அங்கீகாரம் கொடுத்து இருக்கின்றது என தெரிவித்தார்.
மனுதர்மம் என்பது பெண்களை இழிவுபடுத்துகின்றது,  பா.ஜ.க மனுதர்மத்தை  பின்பற்றுகின்றதா என்று விடுதலை சிறுத்தைகள் உட்பட  அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்கின்றனர் எனவும் , தமிழகத்தில் சாதாரண கிராமத்தில் பிறந்த பெண்மணிக்கு பா.ஜ.க அங்கீகாரம் கொடுக்கின்றது, இதில் மனுதர்மம் எங்கு வருகின்றது? என கேள்வி எழுப்பினார். ஏதோ நூலில் யாரோ சொல்வதற்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லை,  திருமாவளவன் அரசியலுக்காக  மனுதர்ம நூலை வைத்து பேசுகின்றார் எனவும் அவர் குற்றம்சாட்டினார்.பெண்கள் குறித்து காலத்திற்கு ஓவ்வாமல்  எழுதி வைத்து இருப்பது  பெண்களுக்கு தேவையில்லை எனவும், பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, சுதந்திரமாக நடமாடுவதற்கு சமுதாயம் ,  பாதுகாப்பு போன்றவையே தேவை எனவும்  தெரிவித்தார்.இது தான் பெண்களுக்கு அவசியமே தவிர , மனுதர்மம் அவசியமில்லை எனவும், மனுதர்மத்தை  அரசியலுக்காக திருமாவளவன் பயன்படுத்துகின்றார் எனவும்  தெரிவித்தார்.குஷ்புவிற்கு பதவி வழங்கப்படாமல்  இருப்பதற்கு பெரியாரிஸ்ட் என்று சொன்னது காரணமில்லை என கூறிய அவர், குஷ்புவிற்கும் கூடிய விரைவில் கட்சியில்  அங்கீகாரம் கிடைக்கும் எனவும், குஷ்புவிற்கு கட்சியில் பொறுப்பு எதுவும் இல்லை என்றாலும் அவரை போராட்டங்களுக்கு தலைமை ஏற்க பா.ஜ.க அனுப்புகின்றது அதுவே பெரிய அங்கீகாரம்  என தெரிவித்தார்.ஈ.வெ.ரா என்று சொன்னால் மரியாதை குறைத்து காட்டலாம், பெரியார் என்று சொன்னார் மரியாதையை கூட்டிகாட்டலாம் என்று நாங்கள் பார்க்கவில்லை எனவும், எந்த தலைவராக இருந்தாலும்  கருத்துகளில் முரண்படலாம், ஆனால் அவர்களுக்கு உரிய மரியாதையை எப்போதும் கொடுக்கிறோம் எனவும்  தெரிவித்தார்.

பெரியாரிஸ்ட்  என்ன வார்த்தை பிரயோகத்தால் பொறுப்பு வழங்கப்படவில்லை என்ற முடிவிற்கு வரவேண்டியது இல்லை எனவும்  அவர் தெரிவித்தார். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமையாக அதிமுக இருக்கின்றது எனவும் ,தேசிய ஜனநாயக கட்சியின் முதல்வர் வேட்பாளர் என்பது கூட்டணியில் இருக்கும் எல்லா கட்சிகளும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு எனவும்  தெரிவித்தார். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம் இது வரை நடக்கவே  இல்லை எனவும் ,தமிழகத்தில் அதிமுக தலைமையேற்று இந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை நடத்தி இருந்தால் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்ற கேள்விக்கு  தெளிவான முடிவு இருந்திருக்கும்  என பா.ஜ.க மகளிரணி தேசிய தலைவர்  வானதி சீனிவாசன் தெரிவித்தார்..

 
First published: October 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading