Home /News /national /

உண்ணாவிரதம் என்னும் ஆயுதம் மூலம் போராட்டங்களை தடுத்து நிறுத்திய காந்தியின் வளர்ப்பு மகள் பீபி சலாம் பற்றித் தெரியுமா?

உண்ணாவிரதம் என்னும் ஆயுதம் மூலம் போராட்டங்களை தடுத்து நிறுத்திய காந்தியின் வளர்ப்பு மகள் பீபி சலாம் பற்றித் தெரியுமா?

பீபி அம்துஸ் சலாம்

பீபி அம்துஸ் சலாம்

Bibi Amtus Salam: இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, அவரது சகோதரர்கள் பாகிஸ்தானுக்குச் சென்றபோது, ​​அவர் இந்தியாவில் தங்கி பாகிஸ்தானில் இருந்து வரும் அகதிகள் தங்குவதற்கு பிரத்யேகமாக கட்டப்பட்ட நகரமான ராஜ்புராவில் கஸ்தூரிபா சேவா மந்திரை நிறுவினார்

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
காந்திய வாதியாக உண்ணாவிரதம் எனும் ஆயுதத்தைக் கையில் எடுத்து, நாட்டில் குறுக்கும் நெடுக்குமாக எங்கே வகுப்புவாத போராட்டம் நடந்தாலும், அந்தப் போராட்டத்தை நிறுத்த   ஓடோடிச் சென்ற காந்தியின் வளர்ப்புமகளைப் பற்றித் தெரியுமா...

பீபி அம்துஸ் சலாம், பாட்டியாலாவின் பழமைவாத, பிரபுத்துவ முஸ்லீம் குடும்பத்தைச் சேர்ந்த அப்துல் மஜித் கானின் மகளாகப் பிறந்தார். குடும்பம் பர்தா அணிவதைக் கட்டாயமாகக் கடைபிடித்ததன் காரணமாக அவளுக்குக் கல்வி மறுக்கப்பட்டது.

ஆனால் நாட்டுப்பற்று காரணமாகவும், காந்தியக் கொள்கை மீது ஏற்பட்ட ஈர்ப்பாலும் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார். காந்தியக் கொள்கையான உண்ணாவிரதம் எனும் ஆயுதத்தை தீவிரமாகக் கையாண்டார்.

சுதந்திர போராட்டத்தின்போது எங்கெல்லாம் அடக்குமுறைகளும் போராட்டங்களும் எழுந்ததோ அங்கெல்லாம் பீபி சலாம் இருந்தார். தனது உண்ணாவிரதத்தால் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவந்தார்.

சுதந்திர போராட்டத்தின்போது ரகசிய வானொலி நடத்திய கல்லூரி மாணவி... யார் இந்த உஷா மேத்தா

பீபி அம்துஸ் சலாம் காந்தியின் பிரியப்பட்ட நபராக இருந்தார், மேலும் காந்தி சலாமை தனது மகள் என்று அழைத்தார். 1934 இல் சர்தார் படேலுக்கு எழுதிய கடிதத்தில், காந்தி சலாமின் "இதயம் தங்கம், ஆனால் அவரது உடல் பித்தளை" என்று குறிப்பிட்டார். காந்தியின் ஆசிரமத்தில் வாழ்ந்த முஸ்லீம் பெண்ணாக இவர் இருந்தார்.

1946 இல் நோகாலியில் வகுப்புவாத சண்டை தீப்பிழம்பாய் இருந்தபோது, ​​மகாத்மா காந்தியின் தூதராக ஏழைகளுக்கு ஆதரவாக இருந்தார். அந்த சண்டை முடியவும் வழிவகுத்தார். தேரா நவாப்பில் குழந்தைகள் மற்றும் பெண்கள் கடத்தப்பட்ட போது, பஹவல்பூர் அதிகாரிகளை ​​அவரது காலவரையற்ற உண்ணாவிரதம் மூலம் தோற்கடித்து, குழந்தைகளையும் பெண்களையும் மீட்டார்.

கல்கத்தா, டெல்லி மற்றும் டாக்காவில் நடந்த வகுப்புவாத கலவரத்தின் போது, ​​ஆபத்தான இடங்களுக்கும் விரைந்து சென்று, தன் உயிரை பணயம் வைத்து உண்ணாவிரதம் இருந்து கலவரங்களை அடைக்கியுள்ளார் என்று மகாத்மா காந்தியின் தனிப்பட்ட செயலாளரான பியாரேலால் நய்யார் 'மகாத்மா காந்தி: தி லாஸ்ட் பேஸ்' புத்தகத்தில் எழுதியுள்ளார்.

சலாம் இந்து-முஸ்லீம் நல்லிணக்கத்தின் பாலமாக இருந்தார். மேலும் அந்த இலக்கை அடைவதற்கான அவரது முயற்சிகள் அதிகம். நல்லிணக்கத்திற்காக சிராண்டியில், அம்துஸ் சலாம் சில உள்ளூர் முஸ்லிம்களுக்கு எதிராக 25 நாள் உண்ணாவிரதம் இருந்தார்.

Exclusive: இனி அரசு மானியம், பலன்களை பெற ஆதார் கட்டாயம்..UIDAI சுற்றறிக்கை

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, அவரது சகோதரர்கள் பாகிஸ்தானுக்குச் சென்றபோது, ​​அவர் இந்தியாவில் தங்கி பாகிஸ்தானில் இருந்து வரும் அகதிகள் தங்குவதற்கு பிரத்யேகமாக கட்டப்பட்ட நகரமான ராஜ்புராவில் கஸ்தூரிபா சேவா மந்திரை நிறுவினார். ராமேஸ்வரி நேரு மற்றும் லஜ்ஜாவதி ஹூஜாவுடன் சேர்ந்து பாகிஸ்தானில் விடப்பட்ட பல பெண்களை மீண்டும் அழைத்து வரும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டார்.

காந்தியின் மறைவிற்கு பின்னர் நேரு குடும்பத்துடன் நேரடியாக பேசும் நபராக சலாம் இருந்தார். இந்திரா காந்தியை ‘இந்து மகளே’ என்று அழைத்து வந்தார். ராஜ்புராவில் பஹவல்பூர் குடியேறியவர்களின் மறுவாழ்வில், துன்பப்படும் நிலை கண்டு, அதற்கு மறுவாழ்வு அமைச்சகமே மிகப்பெரிய பிரச்சனை என்று அவர் கண்டறிந்தார். அது குறித்து நேருவிற்கு கடிதம் அனுப்பினார். அப்போதைய மறுவாழ்வு அமைச்சகத்தின் துணைச் செயலாளராக இருந்த சுதிர் கோஷிடம் நேரு, அம்துஸ் சலாமைச் சந்தித்து முதல் அறிக்கையை அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

சுதந்திரத்திற்காகவும், சுதந்திரம் அடைந்த பின்னும் நாட்டுக்காக உழைத்த சலாம்,செப்டம்பர் 29, 1985 அன்று காலமானார். இப்படி ஒரு மகத்தான போராளியை கால ஓட்டத்தில் மறந்துவிடக்கூடாது. போற்றி பாராட்டப்படவேண்டும்.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Fasting, Gandhi, Independence day

அடுத்த செய்தி