முகப்பு /செய்தி /இந்தியா / 1000 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளால் ஆன காந்தி சிலை! சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்பட்ட நொய்டாவில் நிறுவப்பட்டது

1000 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளால் ஆன காந்தி சிலை! சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்பட்ட நொய்டாவில் நிறுவப்பட்டது

நொய்டாவில் நிறுவப்பட்ட 1000 கிலோ கழிவுகளால் ஆன காந்தி சிலை!

நொய்டாவில் நிறுவப்பட்ட 1000 கிலோ கழிவுகளால் ஆன காந்தி சிலை!

தூய்மை பாரதத்தின் ஒரு அங்கமாகத் தேசத் தந்தையின் சிலையை நொய்டா நிர்வாகம் HCL உடன் இணைந்து நகரைச் சுற்றி சேகரிக்கப்பட்ட 1,000 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி உருவாக்கியது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Uttar Pradesh | Noida

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 80வது ஆண்டு விழாவையொட்டி உ.பி., மாநிலம் நொய்டாவில், 20 அடி உயர மகாத்மா காந்தியின் சிலை ஒன்று திறக்கப்பட்டது. சத்தியாகிரகத்தை தலைமை ஏற்று அணிவகுத்துச் சென்ற காந்தியின் சிலை மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளால் ஆனது என்பது தான் இதன் சிறப்பு.

மகாத்மா காந்தி ஒரு சுதந்திர இந்தியாவை மட்டுமல்ல, தூய்மையாகவும் உண்மையாகவும் இருக்கும் பாரதம் வேண்டும் என்றும் எண்ணினார். அவரது எண்ணம் போலவே தூய்மை பாரதத்தின் ஒரு அங்கமாக இச்சிலையைச் செய்துள்ளனர்.

சேதமடைந்த தொப்புள் கொடி ஸ்டெம் செல்களை புத்துயிர் பெற வைக்கும் புதிய தொழில்நுட்பம்

தேசத் தந்தையின் சிலையை நொய்டா நிர்வாகம் HCL உடன் இணைந்து நகரைச் சுற்றி சேகரிக்கப்பட்ட 1,000 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி உருவாக்கியது.

கவுதம் புத் நகர் எம்பி மகேஷ் சர்மா, எம்எல்ஏ பங்கஜ் சிங், எம்எல்ஏ தேஜ்பால் சிங் நகர் மற்றும் நொய்டா ஆணையத்தின் சிஇஓ ரிது மகேஸ்வரி ஆகியோர் 20 அடி உயரம், 6 அடி நீளம், 6 அடி அகலம் கொண்ட 1,150 கிலோ எடை கொண்ட சிலையை திறந்து வைத்தனர்.

நொய்டாவின் செக்டர் 137 இல் நிறுவப்பட்ட சிலை, பிளாஸ்டிக்கால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த 100 சதவீதம் இணக்கத்தை உறுதி செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளலாம் என்று நம்புகின்றனர்.

அதே நேரத்தில், "பிளாஸ்டிக் எக்ஸ்சேஞ்ச் மொபைல் வேன்" இயக்கமும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சாரத்தின் கீழ் இதுவரை 170 பேர் 816 கிலோ பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் 52 கிலோ பாலிதீன் பைகளைக் கொடுத்து துணி பைகள், மரப் பொருட்களை மற்றும் ஸ்டீல் பாட்டில்களைப் பெற்றுள்ளனர் உள்ளனர்.

First published:

Tags: Gandhi, Mohandas Karamchand Gandhi, Noida, Swachh Bharat