நவராத்திரி பண்டிகை செப்டம்பர் 26 ஆம் தொடங்கி நாடு முழுவதும் கோலாகலமாக தற்போது கொண்டாடப்படுகிறது. நவராத்திரியில் ஒன்பது நாட்களும் ஒன்பது விதமான அலங்காரங்கள் செய்து, பூஜைகள், என்று விமரிசையாகக் கொண்டாடப்படும். முதல் மூன்று நாட்கள் பார்வதி தேவிக்கு, இரண்டாம் மூன்று நாட்கள் லக்ஷ்மி தேவிக்கும், கடைசி மூன்று நாள் சரஸ்வதி தேவிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக இந்த பண்டிகை கொண்டாட்டங்கள் தனித்துவமாக கொண்டாடப்படும் நிலையில்,மேற்கு வங்க மாநிலத்தில் துர்கா பூஜை பண்டிகையாக இது விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அம்மாநிலத்தில் உள்ள ரூபி கிராசிங் என்ற பகுதியில் துர்கா பூஜை பண்டிகைக்காக அமைக்கப்பட்ட கொலு பொம்மை அலங்காரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அகில இந்திய இந்து மகாசாபா என்ற அமைப்பானது இந்த துர்கா பூஜைக்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த பந்தலில் துர்கை தேவி உள்ளிட்ட அம்மன், கடவுகளின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் துர்கை தேவி மகிசாசுகரனை வதம் செய்யும் நிகழ்வை கொலு பொம்மையாக வைத்திருந்தனர். இதில், மகிசாசுரன் இருக்க வேண்டிய இடத்தில் அண்ணல் காந்தியின் தோற்றம் கொண்ட சிலை வைக்கப்பட்டுள்ளது. காந்தி பொம்மையை துர்கை அம்மன் வதம் செய்வது போல கொலு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அங்கு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறை அறிவுறுத்தலின் பேரில் விழா ஏற்பாட்டாளர்கள் பொம்மையை மாற்றியுள்ளனர்.
இதையும் படிங்க: தாண்டியா ஆட்டமும் ஆட.. தசரா கூட்டமும் கூட..! களைகட்டிய நவராத்திரி விழா - பிரபலங்கள் கொண்டாட்டம்!
இந்த சம்பவம் திட்டமிட்டு நடைபெறவில்லை, எதார்த்தமாக நடந்தது என இந்து மகாசபா அமைப்பினர் விளக்கம் தந்துள்ளனர். அதேவேளை, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. "இது தேச தந்தையை அவமதிக்கும் செயல். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இதை கவலையுடன் பார்க்க வேண்டும். இந்த அவமதிப்பிற்கு பாஜக பதில் அளிக்குமா" என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Durga Puja, Gandhi, Navrathri