ஹோம் /நியூஸ் /இந்தியா /

மகர விளக்கு சீசன்.. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இந்தாண்டு எவ்வளவு வருமானம் தெரியுமா?

மகர விளக்கு சீசன்.. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இந்தாண்டு எவ்வளவு வருமானம் தெரியுமா?

சபரிமலை

சபரிமலை

Sabarimala Income : சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இவ்வாண்டு மண்டல மகரவிளக்கு சீசனில் இதுவரை வரை கிடைத்த மொத்த வருமானத்தின் விவரம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kerala, India

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இந்தாண்டு கிடைத்த வருமானத்தின் விவரம் குறித்து தேவசம்போர்டு தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலையில் சுவாமி ஐயப்பனின் ஸ்ரீ கோவில் அமைந்துள்ளது. கோவிலின் நடை ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஐந்து நாட்கள் திறந்திருக்கும் என்றாலும் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்கள் இந்த கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். கார்த்திகை மாதம் முதல் நாள் மண்டல பூஜைகளுக்காக கோவில் நடை திறக்கப்படும். தொடர்ந்து 41 நாட்கள் பக்தர்கள் வருகைக்காக சிறப்பு நெய்யபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி மாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. மண்டல பூஜை முடிந்த பின் தற்போது மகர விளக்கு பூஜை நடைபெற்று வருகிறது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் செய்வதில் சிரமம் இருந்தது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டதால் சபரிமலை மண்டல கால மகரவிளக்கு பூஜைக்கு அதிக அளவில் பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர்.

இந்நியைலில் சபரிமலை ஐயப்பன் கோவில் மகரவிளக்கு மஹோத்ஸவத்தை முன்னிட்டு சன்னிதானம் தேவஸ்வம் விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் ஆனந்த கோபன் கூறுகையில், “சபரிமலையில் இவ்வாண்டு மண்டல மகர விளக்கு காலத்தில் இதுவரை ( 12-01-2023 வரை ) மொத்தம் ரூ.310 கோடியே 40 லட்சம்வருமானம் கிடைத்துள்ளது.

இதில் ரூ.231 கோடியும் மண்டல காலத்திலும், ரூ.78 கோடி மகரவிளக்கு காலத்திலும் கிடைத்துள்ளது. இதில் அரவணை விற்பனையில் இருந்து மண்டல காலத்தில் தேவஸ்வத்துக்கு ரூ.107 கோடி மற்றும் மகரவிளக்கு காலத்தில் ரூ.32 கோடி கிடத்துள்ளது” என அவர் தெரிவித்தார்.

First published:

Tags: Ayyappan temple in Sabarimala, Kerala, Sabarimala, Sabarimala devotees