மகாராஷ்டிரா மாநிலத்தில் மே 2ம் தேதி முதல் ஜூன் 12ம் தேதி வ் வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விதர்பா பகுதியை தவிர ஏனைய பகுதிகளில் பள்ளிகள் ஜூன் 13ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பாக குழப்பமான சூழல் நிலவி வந்தது. கொரோனா காரணமாக பள்ளிகளுக்கு அதிகளவு விடுமுறை விடப்பட்டதால், 1 முதல் 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 30ம் தேதிவரை வகுப்புகளை வைக்க பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. வழக்கமாக தேர்வு முடிந்த பின்னர் ஏப்ரல் 15ம் தேதியே 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்படும் வழக்கம்.
இந்நிலையில், மே 2ம் தேதி முதல் ஜூன் 12ம் தேதிவரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை மகாராஷ்டிர கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். விதர்பா பகுதிகளில் நிலவும் கடும் வெயில் காரணமாக அங்கு மட்டும் ஜூன் 27ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் ஏப்ரல் 30ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
இதையும் படிங்க: பீகாரில் ராமநவமி அன்று மசூதியில் காவிக்கொடி ஏற்றம்: மூன்றுபேர் கைது
உள்ளூரில் கிறிஸ்துமஸ் அல்லது கணபதி பண்டிகை விடுமுறையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்தால், மாவட்ட அளவிலான கல்வி அலுவலர்கள் கோடை அல்லது தீபாவளி விடுமுறையைக் குறைக்கலாம். ஆனால் ஒரு கல்வியாண்டில் மொத்த விடுமுறைகள் 76 நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.