மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசுக்கு ஏற்பட்டிருக்கும் உச்சக்கட்ட நெருக்கடியை காட்டிலும், கவுகாத்தியில் சிவசேனாவின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் செய்யப்படும் செலவுகள், பேசுப்பொருளாக மாறியுள்ளது.
மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இந்த கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சுமார் 40 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஒன்றுகூடி கடந்த திங்கட்கிழமை நள்ளிரவில் குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள சொகுசு ஹோட்டலுக்கு சென்றனர்.
பின்னர் அவர்கள் புதன்கிழமை மற்றொரு பாஜக ஆளும் மாநிலமான அஸ்ஸாமில் உள்ள கவுகாத்திக்கு பறந்தனர். கவுகாத்தியின் கோட்டாநகர் பகுதியில் உள்ள Radisson Blu சொகுசு ஹோட்டலில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏழு நாட்களுக்கு 70 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: பிரசவ வலியை குறைக்க சிரிப்பு வாயுவை பயன்படுத்தும் அரசு மருத்துவமனை.! கர்ப்பிணிகள் மகிழ்ச்சி
ஒரு அறையின் ஒருநாள் வாடகை 11 ஆயிரத்து 500 ரூபாய். ஆக 70 அறைகளுக்கு ஒரு நாள் வாடகை மட்டும் 8 லட்சம் ரூபாய். 7 நாட்களுக்கான வாடகை கட்டணம் 56 லட்ச ரூபாய் என்று தெரிய வந்துள்ளது. இதனுடன் உணவு மற்றும் இதர சேவைகளுக்கான ஒரு நாள் செலவு மட்டும் 8 லட்ச ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஹோட்டலில் மொத்தம் 196 அறைகள் உள்ளன. இதில், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட அறைகளை தவிர்த்து, புதிய முன்பதிவுகளை ஹோட்டல் நிர்வாகம் ஏற்கவில்லை. மேலும், ஹோட்டலின் பொது உணவகம் மூடப்பட்டு, ஹோட்டலில் தங்கியிருப்பவர்களுக்கு மட்டுமே உணவகம் செயல்படுகிறது.
மேலும் படிக்க: டெல்லியில் நவம்பர் முதல் பிப்ரவரி வரை கனரக வாகனங்களுக்குத் தடை!
விமான போக்குவரத்து, சொகுசு பேருந்து, எம்.எல்.ஏக்களின் விருப்பங்களுக்கான செலவுகள் தனி கணக்காக உள்ளன. ஹோட்டலுக்குள் ஊடகவியலாளர்கள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது. ஹோட்டலின் பாதுகாப்பை தனியார் பாதுகாப்பு நிறுவனத்திடம் இருந்து அசாம் காவல்துறை கைப்பற்றியது. ஏராளமான பாதுகாப்பு, உச்சக்கட்ட சோதனை என சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள சொகுசு ஹோட்டல் கோட்டையாக மாறியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.