Home /News /national /

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு.. ஏக்நாத் ஷிண்டே வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு.. ஏக்நாத் ஷிண்டே வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

நம்பிக்கை வாக்கெடுப்பு

நம்பிக்கை வாக்கெடுப்பு

Maharastra Floor test: இன்று  நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு ஆபத்தில்லை என்றே அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

    மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளவுள்ள நிலையில், அவருக்கான வெற்றி வாய்ப்பு  எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.

    மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 288 இடங்களில், ஒரு இடம் காலியாக உள்ளதால் 287 உறுப்பினர்கள் உள்ளனர், சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாதி கூட்டணியில் சிவசேனா 55, தேசியவாத காங்கிரசுக்கு 53, காங்கிரஸுக்கு 44 எம்எல்ஏ-க்கள் என மொத்த பலம் 169 ஆக இருந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணியை பொருத்தவரை பாஜக-வை சேர்ந்த 106 உள்பட 113 பேர் இடம்பெற்றிருந்தனர்.

    மகாராஷ்டிர நிர்மான் சேனா உறுப்பினர் உள்பட எந்த அணியையும் சாராத 5 பேர் தனியாக செயல்பட்டு வந்தனர். சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி முதல்வராக பொறுப்பேற்றபின் நடந்த சபாநாயகர் தேர்தலில் பாஜக அணிக்கு 164 பேரும், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா வேட்பாளருக்கு 107 வாக்குகளும் கிடைத்துள்ளன. மீதமுள்ள 16 பேர் பங்கேற்கவில்லை அல்லது வாக்களிக்கவில்லை. பாநாயகராக பாஜகவை சேர்ந்த ராகுல் நர்வேகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இதை படிக்க: அழிவின் விளிம்பில் உள்ள அரசியல் கட்சிகளின் தவறில் இருந்து பாடம் கற்க வேண்டும்- பாஜக செயற்குழுவில் மோடி பேச்சு

    சட்டப்பேரவையில் ஷிண்டே தலைமையிலான அணி இன்று பலத்தை நிரூபிக்க உள்ள நிலையில், ஞாயிறன்று வாக்களிக்காத 16 பேர் உத்தவ் தாக்கரேயின் சிவசேனாவுக்கு வாக்களித்தாலும் கூட, ஷிண்டே அரசு வென்றுவிடும். சிவசேனா அணியில் இருக்கும், ஏஐஎம்ஐஎம் மற்றும் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த 4 பேர் ஞாயிற்றுக்கிழமை வாக்களிக்கவில்லை. அவர்கள்  எதிர்த்து வாக்களித்தாலும் ஷிண்டே அரசுக்கு சிக்கல் இல்லை. எனவே, இன்று  நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஷிண்டே அரசுக்கு ஆபத்தில்லை என்றே அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Maharastra, Shiv Sena

    அடுத்த செய்தி