ஹோம் /நியூஸ் /இந்தியா /

கட்டாயப்படுத்தி உடலுறவு.. 15 வயது மகளை காதலனுக்குத் திருமணம் செய்து வைத்த தாய்- மகாராஷ்டிராவில் நடந்த கொடூரம்!

கட்டாயப்படுத்தி உடலுறவு.. 15 வயது மகளை காதலனுக்குத் திருமணம் செய்து வைத்த தாய்- மகாராஷ்டிராவில் நடந்த கொடூரம்!

போக்ஸோ சட்டத்தில் கைது

போக்ஸோ சட்டத்தில் கைது

சிறுமியிடம் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்துள்ளனர்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Maharashtra, India

  மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஒரு மைனர் பெண்ணை அவரது தாயின் 28 வயது காதலருடன் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்ததாகக் கூறப்படுகிறது.

  மகாராஷ்டிராவைச் சேர்ந்த 36 வயதான பெண் அவரது தூரத்து உறவினரான 28 வயதான வாலிபரை காதலித்து வந்துள்ளார். பின்னர் தனது 15 வயது மகளை வலுக்கட்டாயமாக அந்த நபருக்கு திருமணம் செய்து வைக்க முயற்சித்துள்ளார்.

  இதற்கு மறுப்பு தெரிவித்த சிறுமியிடம் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்துள்ளனர். நவம்பர் 6 ஆம் தேதி, அகமதுநகரில் உள்ள ஒரு கோவிலில் தனது காதலனுக்கும் தனது மகளுக்கும் திருமணம் நடத்தி வைத்துள்ளார்.

  இதையும் படிங்க : 3D பிரிண்டிங்கில் வளர்க்கப்பட்ட மூக்கு.. கேன்சர் நோயாளி முகத்தில் பொருத்திய பிரான்ஸ் மருத்துவர்கள் !

  திருமணம் செய்து வைத்ததோடு அந்த வாலிபருடன் உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று அந்த தாய் வற்புறுத்தியுள்ளார். அந்த வாலிபரும் இவரை கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டுள்ளார். இதை சக தோழியிடம் விவரித்தபோது கேட்ட ஒரு சமூக சேவகரால் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டது.

  சந்தன்நகர் காவல் நிலைய அதிகாரிகள் 36 வயதான பெண்ணையும் அவரது 28 வயது காதலரையும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) சட்டம் மற்றும் குழந்தை திருமணத் தடைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் கைது செய்துள்ளனர்.

  “அந்த வாலிபர் அந்த குடும்பத்தின் ஒரு தொலைதூர உறவினர் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட பெண்ணுடன் தங்கியிருந்தான்" என்று சந்தன்நகர் காவல் நிலைய அதிகாரி கூறினார். மேலும் கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Maharashtra, Minor girl, POCSO case