• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • முடிவுக்கு வந்தது நாசிக் வியாபாரிகள் போராட்டம் - வெங்காய விலை குறைய வாய்ப்பு

முடிவுக்கு வந்தது நாசிக் வியாபாரிகள் போராட்டம் - வெங்காய விலை குறைய வாய்ப்பு

வெங்காய விலை குறைய வாய்ப்பு

வெங்காய விலை குறைய வாய்ப்பு

மகாராஷ்டிரா நாசிக் வியாபாரிகள் போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து, நாடு முழுக்க வெங்காய விலை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

  • Share this:
    வெங்காயத்தை அதிகளவில் வாங்கி வைக்க மத்திய அரசு விதித்த கட்டுப்பாடுகளைக் கண்டித்து நாசிக்கில் நடந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. மத்திய அரசு அண்மையில் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்ததுடன் சிறு வணிகர்கள் 2 டன் மற்றும் பெரிய வணிகர்கள் 25 டன் மட்டுமே வெங்காயத்தை இருப்பு வைக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்தது.

    மராட்டிய மாநிலம் நாசிக்கில் ஆசியாவிலேயே பெரிய லசவ்காவ் வெங்காய சந்தை உள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாடுகளை கண்டித்து 3 நாட்களாக வெங்காய வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.



    இந்நிலையில், முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவைச் சந்தித்த வெங்காய வியாபாரிகள் தங்கள் குறையை முன்வைத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உத்தவ் தாக்ரே உறுதியளித்ததைத் தொடர்ந்து, நாசிக் வெங்காய சந்தை மீண்டும் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இதனால் மெல்ல மெல்ல நாடு முழுக்க வெங்காய விலை சரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: