ஏப்ரல் 30 வரை மகாராஷ்டிரா, மேற்குவங்கம், தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் ஊரடங்கு நீட்டிப்பு!

ஒடிசா, பஞ்சாப்பைத் தொடர்ந்து, இந்த மூன்று மாநிலங்களிலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 30 வரை மகாராஷ்டிரா, மேற்குவங்கம், தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் ஊரடங்கு நீட்டிப்பு!
மாதிரிப் படம்
  • Share this:
மகாராஷ்டிரா மற்றும் மேற்குவங்கத்தில் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அந்தந்த மாநில முதலமைச்சர்கள் அறிவித்துள்ளனர். தெலங்கானாவிலும் ஊரடங்கை நீட்டிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மகாராஷ்ட்ராவில், அது இன்னும் அதிகரித்தபடியே உள்ளதாக முதலமைச்சர் உத்தவ் தாக்ரே தெரிவித்துள்ளார். இதனால், ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டிப்பதாக அவர் அறிவித்தார். வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் அரசு சிறப்பாகவே செயல்பட்டுவருவதாக கூறியுள்ள தாக்ரே, மக்கள் ஒத்துழைக்காவிட்டால் ஏப்ரல் 30க்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதே போல, மேற்குவங்கத்திலும் ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். அந்த மாநிலத்தில் ஜூன் 10ம் தேதி வரை பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.


இந்நிலையில், தெலங்கானாவிலும் ஊரடங்கை 30ம் தேதிவரை நீட்டிக்க மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒடிசா, பஞ்சாப்பைத் தொடர்ந்து, இந்த மூன்று மாநிலங்களிலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Also see:
First published: April 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading