கொரோனா இரண்டாவது அலை - மகாராஷ்டிராவில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு?

கொரோனா வைரஸ்

மகாராஷ்டிராவில் மார்ச் 28-ம் தேதி முதல் இரவு நேரங்களில் ஊரடங்கு அமல்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 • Share this:
  மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில்  ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. ஏற்கெனவே புனே, அமராவதி மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பல்வேறு வழிக்காட்டுதல்களை வழங்கியுள்ளது.

  இந்நிலையில் மகாராஷ்டிராவில் நாளை (மார்ச் 28) முதல் இரவு நேரங்களில் ஊரடங்கு அமல்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களான மால், ஹோட்டல், திரையரங்குகள், பார்கள் ஆகியவற்றில் அரசு விதித்துள்ள நடைமுறைகள் சரியான பின்பற்றப்படுகிறதா என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். நடைமுறைகள் பின்பற்றவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  மால்கள் இரவு 8 முதல் காலை 7 மணிவரை மூடப்படும் எனக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அம்மாநில் பேரிடர் மேலாண்மை மற்றும் மறுவாழ்வுத் துறை மூலம் தனி உத்தரவு விரைவில் வெளியாகும் என முதல்வர் அலுவலக வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது.
  Published by:Ramprasath H
  First published: