மோட்சம் அடையப்போவதாக நம்பி தற்கொலை செய்துகொண்ட மூன்று இளைஞர்கள்.. நடந்தது என்ன?

தற்கொலைக்கு முன்பாக மூவரும் மரத்துக்கு கீழ் அமர்ந்து மது அருந்திவிட்டு, புடவைகளைக்கொண்டு தூக்கிட்டு உயிரிழந்திருப்பதாகவும், இந்த மரணங்களில் சந்தேகப்படும்படியான விஷயங்கள் அனைத்தும் தெளிவுபடுத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மோட்சம் அடையப்போவதாக நம்பி தற்கொலை செய்துகொண்ட மூன்று இளைஞர்கள்.. நடந்தது என்ன?
கோப்புப்படம்.
  • Share this:
மஹாராஷ்ட்ர மாநிலம் ஷஹாபூர் வனப்பகுதியில் மூன்று இளைஞர்கள் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டதையடுத்து இரண்டு நாட்கள் கழித்து அவர்களுடைய மரணம் குறித்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. நிர்வாண நிலை என்னும் மோட்சம் அடையப்போவதாக அந்த இளைஞர்கள் நம்பியதால், அவர்கள் அந்த முடிவினைத் தேடிக்கொண்டதாக காவல்துறை அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

இறந்த மூவருடன், நான்காவதாக ஒரு நபரும் தற்கொலைக்காக திட்டமிட்டிருந்ததாகவும், கடைசி நேரத்தில் முடிவினை மாற்றிக்கொண்டதாகவும் தெரிய வந்துள்ளது. நிதின் பெரே, மஹேந்திர துபேல், முகேஷ் தவத் என்னும் கர்தி கிராமத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் அமாவாசை தினத்தன்று மோட்சம் அடையப்போவதாக நம்பி, இம்முடிவை எடுத்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர். நான்காவது நபர் ஒருவர் கடைசி நேரத்தில் முடிவைக் கைவிட்டதாக அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கிறது.தற்கொலைக்கு முன்பாக மூவரும் மரத்துக்கு கீழ் அமர்ந்து மது அருந்திவிட்டு, புடவைகளைக்கொண்டு தூக்கிட்டு உயிரிழந்திருப்பதாகவும், இந்த மரணங்களில் சந்தேகப்படும்படியான விஷயங்கள் அனைத்தும் தெளிவுபடுத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
First published: November 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading