• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • குழந்தைக்காக ஐந்து ரூபாய் கேட்ட மனைவி: அழுத குழந்தையை ஆத்திரத்தில் தரையில் அடித்துக் கொலை செய்த கணவன்: மகாராஷ்டிரா கிராமத்தில் பயங்கரம்

குழந்தைக்காக ஐந்து ரூபாய் கேட்ட மனைவி: அழுத குழந்தையை ஆத்திரத்தில் தரையில் அடித்துக் கொலை செய்த கணவன்: மகாராஷ்டிரா கிராமத்தில் பயங்கரம்

காட்சிப் படம்

காட்சிப் படம்

இருவருக்கும் 2018-ல் திருமணம் நடந்துள்ளது, கணவன் அடிக்கடி குடித்து விட்டு வந்து தகராறு செய்து மனைவியை அடித்துத் துன்புறுத்துவான், இதனால் மனைவி அடிக்கடி பிரிந்து சென்று விடுவார்.

  • Share this:
    அழுதக் குழந்தைக்கு ஏதாவது வாங்கித்தரலாமே என்ற எண்ணத்தில் கணவனிடம் ஐந்து ரூபாய்தான் கேட்டார் மனைவி, ஆனால் கணவனோ ஆத்திரத்தில் அழுது கொண்டிருந்த 20 மாத காலமேயான பெண் குழந்தையை கொலை செய்துள்ளார்.

    இந்த கொடூர சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் உள்ள லொனாரா என்ற கிராமத்தில் நடந்துள்ளது.

    இந்த மாபாதகக் கொலைச் சம்பவம் தொடர்பாக 28 வயது கணவன் விவேக் உய்கே கைது செய்யப்பட்டார்.

    கோதுமையில் செய்யப்படும் ஒரு இனிப்பு வகையான கஜா என்ற தின்பண்டத்தைக் கேட்டு குழந்தை அழுதுள்ளது. அதை வாங்கத்தான் மனைவி கணவனிடம் 5 ரூபாய் கேட்டிருக்கிறார்.

    இதனால் வாக்குவாதம் ஏற்பட குழந்தையை தூக்கி தரையில் அடித்து விட்டான் கணவன் விவேக். தலையில் அடிப்பட்ட குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரை விட்டது.

    குழந்தையைக் காப்பாற்ற தாய் போராடினாள், ஆனாலும் பயனில்லை. தலையில் பலத்த காயமேற்பட்ட குழந்தை சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரை விட்டது.

    கண்ணீருடன் அந்தத் தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விவேக்கைக் கைது செய்தனர்.

    இருவருக்கும் 2018-ல் திருமணம் நடந்துள்ளது, கணவன் அடிக்கடி குடித்து விட்டு வந்து தகராறு செய்து மனைவியை அடித்துத் துன்புறுத்துவான், இதனால் மனைவி அடிக்கடி பிரிந்து சென்று விடுவார்.

    இந்நிலையில் கண்ணையும் மூளையையும் புத்தியையும் மழுங்கடிக்கும் ஆத்திரத்தினால் தன் குழந்தையையே கொலை செய்யும் அளவுக்குச் சென்றுள்ளான் விவேக் என்ற அந்த நபர். குடிதான் காரணம் என்று கிராமத்தினர் கூறுகின்றனர்.

    வறுமையும் குடிவெறியும் சேர்ந்துதான் அடித்தட்டு மக்களை குற்றவாளிகளாக மாற்றுகிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

    மும்பையிலிருந்து 900 கிமீ தொலைவில் உள்ளது இந்த லொனாரா கிராமம் என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: