ஹோம் /நியூஸ் /இந்தியா /

Mission Paani: மாணவர்களுக்கு மழைநீர் சேகரிப்பு திட்டத்தை கற்பித்து வரும் மஹாராஷ்டிரா ஆசிரியர்..

Mission Paani: மாணவர்களுக்கு மழைநீர் சேகரிப்பு திட்டத்தை கற்பித்து வரும் மஹாராஷ்டிரா ஆசிரியர்..

மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆரம்பப்பள்ளி  ஆசிரியரான ரஞ்சித்சிங் டிசாலே

மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆரம்பப்பள்ளி ஆசிரியரான ரஞ்சித்சிங் டிசாலே

இவர் கடந்த 2020 டிசம்பரில் சர்வதேச ஆசிரியருக்கான பரிசை வென்று 1 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7.38 கோடி) பரிசுத்தொகையை பெற்றவர். அதுமட்டுமல்லாது, அவரது திறமைக்காக சமூக ஊடகங்களால் பெரிதும் வைரலான நபர் இவர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நாட்டின் 72-வது குடியரசு தினத்தின் போது அன்றைய நாள் முழுவதும் "மிஷன் பானி" நிகழ்ச்சி நடைபெற்றது. நியூஸ் 18 மற்றும் ஹார்பிக் இந்தியா இணைந்து நடத்திய ஒரு நாள் மிஷன் பானி வாட்டர்தான் தொடங்கிய போது, வாட்டர் வாரியர்ஸ், அரசியல்வாதிகள், மத்திய அமைச்சர்கள் மற்றும் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் நெட்வொர்க் 18 உடன் ஒன்று திரண்டு நீர் பாதுகாப்பு உறுதிமொழியை எடுத்தனர். நீர் பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான கொள்கைகளை சமூக சொற்பொழிவின் வாயிலாக கொண்டு வருவதை இந்நிகழ்வு நோக்கமாகக் கொண்டுள்ளது.

உறுதிமொழியை எடுத்துக் கொண்ட பலரில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆரம்பப்பள்ளி ஆசிரியரான ரஞ்சித்சிங் டிசாலே- வும் ஒருவர். மகாராஷ்டிர மாநிலம், சோலாப்பூர் மாவட்டம், பரிதேவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்சிங் டிசாலே. இவர் கடந்த 2020 டிசம்பரில் சர்வதேச ஆசிரியருக்கான பரிசை வென்று 1 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7.38 கோடி) பரிசுத்தொகையை பெற்றவர். அதுமட்டுமல்லாது, அவரது திறமைக்காக சமூக ஊடகங்களால் பெரிதும் வைரலான நபர் இவர்.

உலக அளவில் ஆசிரியர் பணியில் மிகச் சிறந்த பங்களிப்பை ஆற்றிவரும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில், லண்டனைச் சேர்ந்த Varkey அறக்கட்டளை கடந்த 2014ம் ஆண்டு முதல் இந்த சர்வதேச ஆசிரியர் பரிசு திட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் 2020-ஆம் ஆண்டுக்கான இந்தப் பரிசை ரஞ்சித்சிங் வென்றுள்ளார். பெண் கல்வியை ஊக்குவிக்க முயற்சிகளை மேற்கொண்டது மற்றும் பாட புத்தகத்தில் கியூ.ஆர். குறியீடு முறை மூலம் புரட்சியை ஏற்படுத்தியது போன்ற பணிகள் மூலம் இந்தப் பரிசுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் பரிசை வென்ற ரஞ்சித்சிங், தனது பரிசுத் தொகையில் 50 சதவீதத்தை, இறுதிப் போட்டியாளர்களாக தேர்வான பிற 9 ஆசிரியர்களுடன் சமமாக பகிர்ந்துகொள்ளப்போவதாக அறிவித்து மேலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இந்த நிலையில், நியூஸ் 18 மற்றும் ஹார்பிக் இந்தியா நடத்திய மிஷன் பானி நிகழ்வில் அவர் கலந்துகொண்டுள்ளார். சமீபத்தில் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்த சாதனை ஆசிரியராக ரஞ்சித்சிங் டிசாலே தோன்றியிருந்தாலும், அவர் ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர் என்பது பலருக்கும் தெரியாது.

இவர் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக போடப்பட்ட ஊரடங்கின் போது நீர் பாதுகாப்பைப் பிரசங்கிக்க தனது கிராமத்தில் உள்ள மாணவர்களிடையே நீர் சேகரிப்பு நுட்பங்களை ஊக்குவித்து வந்திருக்கிறார். இது குறித்து நியூஸ் 18-டம் அவர் கூறியதாவது, "ஊரடங்கின் போது, வீட்டிலுள்ள ஒவ்வொரு மாணவரும் எவ்வளவு தண்ணீர் மற்றும் மின்சாரம் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கண்காணிக்க ஒரு கண்காணிப்பு இருக்கையைத் தொடங்கினோம். தரவுகளின் அடிப்படையில், கிராமத்தில் கிடைக்கும் தண்ணீரை எவ்வளவு காலம் பயன்படுத்தலாம் என்பதைப் புரிந்துகொள்வதற்கான செயல் திட்டத்தை மாணவர்கள் தயாரித்தனர்.

மழை பற்றாக்குறை ஏற்பட்டால் அவர்கள் பிளான் B திட்டத்தையும் வகுத்தனர். மாணவர்கள் இப்போது தண்ணீரை நியாயமான முறையில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர், ”என்று பெருமையுடன் கூறினார். நேற்று(ஜன.26), நடைபெற்ற நிகழ்ச்சியில் ரஞ்சித்சிங் டிசாலே மற்றும் வாட்டர் வாரியர் அம்லா ருயா மற்றும் டாக்டர் பவுசியா தரன்னம், சிறுவர் சுற்றுச்சூழல் ஆர்வலர் லிசிபிரிய காஞ்சுகம் மற்றும் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ஆகியோர் இணைந்து நீர் பாதுகாப்புக்கான காரணத்தை ஆதரித்தனர். காலநிலை நடவடிக்கை மற்றும் நீர் போன்ற வளங்களை சேமிக்கும் விஷயங்களில் இளைஞர்களின் பங்களிப்பு மிக முக்கியம். டிசாலே போன்ற ஆசிரியர்கள் எடுத்துவரும் சில முன்முயற்சிகள் மிஷன் பானி இயக்கத்தின் அடைப்படை நோக்கத்தை முன்னேற்ற வழிவகை செய்கிறது.

Published by:Arun
First published:

Tags: Mission Paani