ஹோம் /நியூஸ் /இந்தியா /

Wine என்பது மது கிடையாது - சூப்பர் மார்க்கெட்டில் வைன் விற்பனை நடவடிக்கையை நியாயப்படுத்தும் சஞ்சய் ராவத்!!

Wine என்பது மது கிடையாது - சூப்பர் மார்க்கெட்டில் வைன் விற்பனை நடவடிக்கையை நியாயப்படுத்தும் சஞ்சய் ராவத்!!

Wine

Wine

வைன் என்பது மது கிடையாது. வைன் விற்பனை அதிகரித்தால், அது விவசாயிகளுக்கு தான் பலனளிக்கும் என சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  சூப்பர் மார்க்கெட்களில் வைன் (Wine)  விற்பனை செய்யப்பட இருப்பதால் மகாராஷ்டிர விவசாயிகளில் வருமானம் இரட்டிப்பாகும் என சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

  மகாராஷ்டிர மாநிலத்தில், சூப்பர் மார்க்கெட், பிற கடைகளில் ‘வைன்’ வகை மதுவை விற்பனை செய்ய அனுமதி அளித்து புதிய சட்டத்தை அம்மாநில அரசு கொண்டுவந்துள்ளது. அதன்படி, 1,000 சதுர அடிக்கும் மேல் பரப்பளவு கொண்ட சூப்பர் மார்க்கெட்களில் வைன் விற்பனை செய்யலாம். வருடத்திற்கு 5,000 ரூபாய் கட்டணம் செலுத்தி இதற்கான உரிமம் பெற்றுக்கொள்ளலாம். இங்கு வைன் மட்டுமே விற்பனை செய்யப்படும், பிற மது வகைகளோ, பீர் வகைகளோ இங்கு விற்பனை செய்யப்படாது, அதே போல பள்ளிகள், வழிபாட்டு தலங்கள் அருகாமையில் இருக்கக் கூடிய சூப்பர் மார்க்கெட்களில் வைன் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்படாது எனவும் மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது. மேலும் இங்கு விற்பனை செய்யப்படும் வைன் வகைகளில் ஆல்கஹாலின் அளவு மிகவும் குறைவாகவே இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

  காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் மகாவிகாஸ் அகாதி அரசின் இந்த நடவடிக்கையை, எதிர்கட்சியான பாஜக கடுமையாக எதிர்த்துள்ளது. பாஜகவைச் சேர்ந்த எதிர்கட்சித் தலைவரான தேவேந்திர ஃபட்னாவிஸ் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக பேசுகையில், மதுபான தொழிலின் மீதான ஸ்பெஷல் காதல் காரணமாக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதே போல முன்னர் மதுவிலக்கு அமலில் இருந்த சந்திரபூர் மாவட்டத்தில் மதுவிலக்கை நீக்கியிருப்பதுடன், கலால் வரியையும் பாதியாக குறைத்துள்ளனர் என்றார்.

  Also read:     பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ் - TRAI அதிரடி உத்தரவு!!

  இதனிடையே அரசின் நடவடிக்கைக்கு ஆதரவாக பேசியுள்ள சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத், சூப்பர் மார்க்கெட்களில் வைன் விற்பனை செய்யப்படுவது மூலம் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்க உதவும் என்றார். பாஜகவுக்கு எதிர்க்க மட்டும் தான் தெரியும், விவசாயிகளுக்கு எதுவும் செய்யமாட்டார்கள்.

  வைன் என்பது மது கிடையாது. வைன் விற்பனை அதிகரித்தால், அது விவசாயிகளுக்கு தான் பலனளிக்கும் என சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

  Also read:  நீட் தேர்வில் வெற்றி பெற்ற தருமபுரி முதியவரின் மருத்துவ கனவு நிஜமாகுமா?

  நாட்டின் வைன் தொழிலானது 1,000 கோடி ரூபாய் மதிப்பிலானதாகும். இதில் மகாராஷ்டிரா, மூன்றில் இரண்டு பங்கை கொண்டுள்ளது. மகாராஷ்டிராவில் 40க்கும் மேற்பட்ட வைன் தொழிற்சாலைகள் உள்ளன. இவை பெரும்பாலும் நாசிக்கை ஒட்டியே அமைந்துள்ளன. நாட்டின் வைன் உற்பத்தியில் நாசிக்கின் பங்கு மட்டும் 80% ஆக உள்ளது.

  Published by:Arun
  First published:

  Tags: Maharashtra, Wine