Home /News /national /

omicron: இந்தியாவில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி.. எண்ணிக்கை 4-ஆக உயர்வு

omicron: இந்தியாவில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி.. எண்ணிக்கை 4-ஆக உயர்வு

ஒமைக்ரான் வைரஸ்

ஒமைக்ரான் வைரஸ்

தென்னாப்பிரிக்காவில் இருந்து மகாராஷ்டிராவுக்கு திரும்பிய 33 வயதான இளைஞர் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கர்நாடாக, குஜராத்தை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் ஒமைக்ரான் தொற்று பரவியுள்ளது.  இதன்காரணமாக நாட்டில் ஒமைக்ரான் தொற்று பரவல் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

    தென்னாப்பிரிக்காவில் பரவத் தொடங்கிய புதிய வகை கொரோனா வைரசான ஒமைக்ரான் பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் கொரோனா பரவல் இல்லை என மத்திய அரசு கூறிவந்த நிலையில் நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடக மாநிலத்தில் இருவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது.

    அதைத் தொடர்ந்து வெளிநாடுகளுக்குத் தொடங்கப்படவிருந்த விமான சேவையை மத்திய அரசு ஒத்தி வைத்தது. நாடெங்கிலும் விமான நிலையங்களில் கண்காணிப்பை அதிகரித்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வருவோர் ஒரு வார காலம் கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

    Also Read:  Omicron: இந்தியாவில் 3-வது நபருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியானது

    இந்நிலையில் குஜராத் மாநிலம் ஜாம்நகரிலும் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அறிவித்தது. இதன்மூலம் இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 3 ஆக அதிகரித்தது.தொடர்பு உறுதியான நபர் 72 வயதானவர் என்றும் ஆப்ரிக்காவில் உள்ள ஜிம்பாப்வே நாட்டில் இருந்து தென்னாப்ரிக்கா வழியாக இரண்டு நாட்களுக்கு முன்பு குஜராத் வந்ததாக அம்மாநில சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் இருந்து மகாராஷ்டிராவுக்கு திரும்பிய 33 வயதான இளைஞர் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Corona, Corona Symptoms, Corona Vaccine, CoronaVirus Symptoms, Covid-19, Covid-19 vaccine, Gujarat, India, Karnataka, Omicron, Tamil News

    அடுத்த செய்தி