• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • Corona Crisis | உயிரிழப்பில் 1,000ஐ நெருங்கிய மகாராஷ்டிரா: பாதிப்பில் மிரட்டும் கர்நாடகா!

Corona Crisis | உயிரிழப்பில் 1,000ஐ நெருங்கிய மகாராஷ்டிரா: பாதிப்பில் மிரட்டும் கர்நாடகா!

கொரோனா 2வது அலை

கொரோனா 2வது அலை

தலைநகர் பெங்களூருவில் மட்டும் ஒரே நாளில் 23,106 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  • Share this:
கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை சில மாநிலங்களை உலுக்கி வருகிறது. குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அதிகளவில் பாதிப்புகள் ஏற்பட்டு வருவதால் அங்கு சுகாதார கட்டமைப்பு ஸ்தம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவமனைகளும், மயானங்களும் நிரம்பி வழிகின்றன. ஆக்ஸிஜன் உள்ளிட்ட சிகிச்சைக்கு அத்யாவசிய தேவையானவற்றிற்கு மிகப்பெரிய அளவில் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

மேலும் சில மாநிலங்களும் மோசமான நிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றன. கேரளா, கர்நாடகாவில் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இதுவரை இல்லாத சாதனை அளவை எட்டியுள்ளன,

உயிரிழப்பில் 1,000ஐ நெருங்கிய மகாராஷ்டிரா:

நேற்று ( மே 5) தினசரி கொரோனா உயிரிழப்பில் மகாராஷ்டிர மாநிலம் புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. அங்கு ஒரே நாளில் மட்டும் 920 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, மகாராஷ்டிராவில் நேற்று புதிதாக 57,640 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 57,006 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருக்கின்றனர்.

தலைநகர் மும்பையில் மட்டும் ஒரே நாளில் 3,879 புதிய பாதிப்புகளும், 77 உயிரிழப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.அங்கு மொத்தம் 6,41,569 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

பெங்களூருவில் நிலைமை மோசம்:

கர்நாடக மாநிலத்தில் இதுவரை இல்லாத வகையில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 50,000ஐ கடந்துள்ளது. நேற்று கர்நாடக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 50,112 பேருக்கு அங்கு புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் ஒரே நாளில் 346 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மாநிலத்திலேயே அதிகபட்சமான தலைநகர் பெங்களூருவில் மட்டும் ஒரே நாளில் 23,106 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தின் பாசிட்டிவிட்டி ரேட் 32%ஐ கடந்துள்ளது. அப்படியென்றால் அங்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் மூவரில் ஒருவருக்கு பாசிட்டிவ் என அர்த்தம். கர்நாடக மாநிலத்தில் 4,87,288 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

முதல் முறையாக கடந்த ஆண்டு மார்ச் 8ம் தேதி கர்நாடகாவில் முதல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது, இன்றைய நிலையில் அங்கு மொத்த பாதிப்பு 17,41,046 ஆக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: