Home /News /national /

சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ்.. நீதிமன்ற படியேறிய ஷிண்டே - பரபரப்பில் மகாராஷ்டிரா அரசியல்

சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ்.. நீதிமன்ற படியேறிய ஷிண்டே - பரபரப்பில் மகாராஷ்டிரா அரசியல்

உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரே

Shiv sena : தகுதி நீக்க நோட்டீசுக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு வழங்கப்பட்ட தகுதி நீக்க நோட்டீசுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. 15 அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும், மத்திய அரசின் ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களைக் கண்டித்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். மும்பையில் சிவசேனா தொண்டர்கள், அதிருப்தி எம்எல்ஏக்களை கண்டித்து இரு சக்கர வாகன பேரணி சென்றனர்.

    இதுபோல் புனே உள்ளிட்ட இடங்களிலும் சிவசேனா தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, அதிருப்தி அமைச்சர் ஏக்னாத் ஷிண்டேவின் புகைப்படத்தை காலணியால் அடித்து ஆவேசத்தை வெளிப்படுத்தினர்.இதனிடையே, கவுகாத்தியில் அதிருப்தி எம்எல்ஏ-க்களுடன் ஆலோசனை நடத்திய ஏக்னாத் ஷிண்டே சிவசேனா கட்சியை காக்கவே தான் போராடி வருவதாக, மராட்டியத்தில் போராடும் தொண்டர்கள் உணரவேண்டும் என வலியுறுத்தினார். அப்போது எம்எல்ஏ நரேந்திர பொன்டேகரின் பிறந்தநாளும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

    இந்நிலையில் 10-க்கும் மேற்பட்ட அதிருப்தி எம்எல்ஏ-க்களிடம் உத்தவ் தாக்கரேவும், அவர்களது மனைவியருடன் தாக்கரேவின் மனைவியும் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்கு மாநில அரசு பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டதாக கூறப்படும் நிலையில் 15 அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அனைத்து அதிருப்தி எம்எல்ஏ-களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரி மகராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, மும்பை ஆணையருக்கும், மராட்டிய அரசுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

    Also Read: பஞ்சாப் இடைத்தேர்தல் - முதலமைச்சர் தொகுதியிலேயே ஆம் ஆத்மி அதிர்ச்சி தோல்வி

    இந்நிலையில் தகுதி நீக்க நோட்டீசுக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பான மனு நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வருகிறது. தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பியிருப்பது அரசியல் சாசன சட்டத்துக்கு எதிரானது என்றும், தகுதி நீக்கம் செய்யும் மனு தொடர்பாக துணை சபாநாயகர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் எனவும் ஏக்நாத் ஷிண்டே தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: BJP, Congress, Maharashtra, Shiv Sena, Uddhav Thackeray

    அடுத்த செய்தி