Home /News /national /

ஆபரேஷன் தாமரையை கையில் எடுத்ததா பாஜக.. சிவசேனா எம்.எல்.ஏக்கள் 11 பேர் சூரத்தில் முகாம் - பரபரக்கும் மகாராஷ்டிரா அரசியல்

ஆபரேஷன் தாமரையை கையில் எடுத்ததா பாஜக.. சிவசேனா எம்.எல்.ஏக்கள் 11 பேர் சூரத்தில் முகாம் - பரபரக்கும் மகாராஷ்டிரா அரசியல்

மகாராஷ்டிரா அரசியல்

மகாராஷ்டிரா அரசியல்

maharashtra : ஏக்நாத் ஷிண்டே 11 எம்.எல்.ஏ.க்களுடன் மாயமானது சிவசேனா கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    எதிரியின் எதிரி நண்பன் என்ற ஃபார்முலாவை கையில் எடுத்து மகாராஷ்ட்ராவில் பாஜகவை வீழ்த்த சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. உத்தவ் தாக்கரே மாநில முதலமைச்சராக அரியணையில் ஏறினார். கூட்டணியில் அவ்வப்போது ஏற்படும் சலசலப்புகளை சரிகட்டி ஆட்சியை நடத்தி வருகிறார். இந்நிலையில் சட்டமேலவை தேர்தல் மூலம் இந்த கூட்டணியின் பலத்தை அசைத்து பார்த்துள்ளது பாஜக. மத்தியில் ஆளும் பாஜகவுக்கு அதில் பாசிட்டிவான ரிசல்டும் கிடைத்துள்ளது.

    மகாராஷ்டிராவில் சட்டமேலவை செயல்பட்டு வருகிறது. சட்டமேலவை உறுப்பினர்களை எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்வர். இதற்கான தேர்தல் நேற்று நடந்தது. மகாராஷ்ட்ரா சட்டப்பேரவையில் மொத்தம் 288 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். பாஜக எம்.எல்.ஏக்கள் 106 பேர் இருக்கிறார்கள். ஆளும் சிவசேனாவுக்கு 55 எம்.எல்.ஏ, காங்கிரஸ் 44 எம்.எல்.ஏ, தேசியவாத காங்கிரஸ் 51 எல்.எல்.ஏ இதர கட்சிகளுக்கு 29 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள்.

    சட்டமேலை உறுப்பினராக ஒருவரை தேர்வு செய்ய 26 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. மொத்தம் உள்ள 10 இடங்களுக்கு 11 பேர் போட்டியிட்டனர். சட்டப்பேரவையில் உள்ள பாஜக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கைக்கு 4 உறுப்பினர்களை தாராளமாக தேர்வு செய்யலாம். ஆனால் பாஜக 5 பேரை தேர்தல் களத்தில் இறக்கிவிட்டது. தேர்தலில் பாஜக 5 இடங்களிலும் வெற்றி பெற்று ஆளும் சிவசேனா கூட்டணிக்கு அதிர்ச்சி கொடுத்தது. சிவசேனா 2, தேசியவாத காங்கிரஸ்2, காங்கிரஸ் கட்சிக்கு 1 இடங்கள் தான் கிடைத்தது.

    Also Read: அதிமுகவை அழிக்க யார் நினைத்தாலும் நான் முன்னின்று காப்பேன் - எடப்பாடி பழனிசாமி

    சட்டமேலவை தேர்தலில் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகவும் ரகசிய ஒப்பந்தம் போட்டதாகவும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டினர். பாஜக தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தேர்தலில் வென்றதாக சிவசேனாவும் குற்றஞ்சாட்டியது. காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் சொந்த வேட்பாளருக்கு வாக்களிக்கவில்லை என்றால் யாரை குற்றம்சொல்வது என காங்கிரஸ் கட்சி தலைவரும் அம்மாநில அமைச்சருமான பாலாசாகேப் தோரட் நொந்துக்கொண்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் இந்த தேர்தலுக்கு பின்னர் சிவசேனாவின் எம்.எல்.ஏவும் அம்மாநில அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே 11 எம்.எல்.ஏக்களுடன் மாயமானது சிவசேனா கட்சிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மகாராஷ்டிரா நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டே அவருக்கு விசுவாசிகளான 11 எம்எல்ஏக்கள் திங்கள்கிழமை மாலை முதல் சூரத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இது மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆப்ரேஷன் தாமரையை பாஜக கையில் எடுத்து இருப்பதாக ஒரு பேச்சும் எழுந்து வருகிறது.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: BJP, Congress, Maharastra, Politics, Shiv Sena, Tamil News, Uddhav Thackeray

    அடுத்த செய்தி