Home /News /national /

மகாராஷ்ட்ரா அரசியல் க்ளைமாக்ஸ்.. 4-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு

மகாராஷ்ட்ரா அரசியல் க்ளைமாக்ஸ்.. 4-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு

ஏக்நாத் ஷிண்டே

ஏக்நாத் ஷிண்டே

Maharashtra : மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    பாஜகவின் ஆதரவுடன் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் குழுத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக பதவியேற்ற நிலையில், மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் வருகிற 4ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

    மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிருப்தி எம்எல்ஏக்களுடன் சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே வெளியேறினார். முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் உத்தரவிட, அதற்கு எதிராக அவர் உச்சநீதிமன்றத்தை நாடினார். ஆனால் வாக்கெடுப்புக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்ததை அடுத்து, உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியை புதன்கிழமை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராகவும், தேவேந்திர பட்னாவிஸ் துணை முதலமைச்சராகவும் வியாழக்கிழமை பொறுப்பேற்றனர்.

    இந்நிலையில் மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, பாஜக தலைவர் ராகுல் நர்வேகர் சபாநாயகர் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்தார். ஞாயிறு அன்று சபாநாயகர் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதனைதொடர்ந்து ஜூலை 4ம் தேதி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

    Also Read: பாஜகவில் இணைகிறாரா பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங்?

    அந்த கூட்டத்தில் ஏக்நாத் ஷிண்டே தனது அரசுக்கான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார். 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் ஒரு தொகுதி காலியாக உள்ளது. மீதமுள்ள 287 இடங்களில், பாஜக மற்றும் கூட்டணிக்கு 129 எம்எல்ஏ-க்களும், ஷிண்டேவிற்கு ஆதரவாக சிவசேனா எம்எல்ஏக்கள் 39 பேரும் , சுயேச்சை எம்எல்ஏகள் 10 பேரும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: BJP, Maharashtra, Politics, Shiv Sena, Uddhav Thackeray

    அடுத்த செய்தி