‘அது லிவ்விங் ரிலேஷன்சிப் தான்’ - பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை மறுத்த மகாராஷ்டிர அமைச்சர்

‘அது லிவ்விங் ரிலேஷன்சிப் தான்’ - பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை மறுத்த மகாராஷ்டிர அமைச்சர்

பெண்ணுடனான உறவை உறுதிப்படுத்தி அமைச்சர் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவுக்கு பின்னர் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க முதல்வருக்கு பாஜக கோரிக்கை வைத்தது.

பெண்ணுடனான உறவை உறுதிப்படுத்தி அமைச்சர் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவுக்கு பின்னர் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க முதல்வருக்கு பாஜக கோரிக்கை வைத்தது.

  • Share this:
மகாராஷ்டிராவின் சமூக நீதித்துறை அமைச்சர் தனஞ்செய் முன்டே (வயது 45), தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை மறுத்திருப்பதுடன் புகார் கூறிய பெண் தன்னுடன் பல ஆண்டுகளாக ஒன்றாக இணைந்து வாழ்ந்து வந்ததாக கூறியிருக்கிறார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் தனஞ்செய் பண்டிட்ராவ் முண்டே. கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் முதல் மகாராஷ்டிர மாநிலத்தின் சமூகநீதித்துறையின் அமைச்சராக இருந்து வருகிறார். அமைச்சர் தனஞ்செய் முண்டே தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக பெண் பாடகி ஒருவர் நேற்று காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனக்கு இருக்கும் சினிமா தொடர்பை பயன்படுத்தி தன்னை பாலிவுட்டில் பாடகியாக
அறிமுகப்படுத்துவதாக உறுதியளித்து தன்னுடைய விருப்பம் இல்லாமலே தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறினார்.

அப்பெண்ணின் குற்றச்சாட்டை மறுத்துள்ள அமைச்சர் தனஞ்செய் முண்டே, ஃபேஸ்புக் பதிவில் விளக்கமளித்துள்ளார், அதில் 2003ம் ஆண்டு முதலே தான் அப்பெண்ணுடன் லிவ்விங்கில் இருந்து
வருவதாகவும், இது தன்னுடைய மனைவி, குழந்தைகளுக்கும் தெரியும், அவர்களும் எங்களின் உறவை ஏற்றுக்கொண்டனர். இதன் பின்னர் எனக்கும் அப்பெண்ணுக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்தன. அவர்களின் பள்ளியில் கூட என்னை தான் தந்தை என குறிப்பிட்டுள்ளேன். நாங்கள் ஒரே குடும்பமாக தான் பயணித்து
வந்தோம்.ஆனால் 2019க்கு பிறகு அப்பெண்ணின் நடவடிக்கையில் மாற்றம் வந்தது. என்னை நீங்கள் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக பொதுவெளியில் கூறிவிடுவேன் என கூறி மிரட்டல் விடுக்கிறார். இது தொடர்பாக நான் அளித்த புகார் மீது தற்போது மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

தற்போதைய புகார் கூட என்னை மிரட்டல் விடுக்கும் நோக்கிலும் எனக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கிலுமே கொடுக்கப்பட்டுள்ளது. என விளக்கமளித்துள்ளார். பாலியல் புகாரையடுத்து அமைச்சரை பதவியில் இருந்து நீக்க வேண்டுமென வலியுறுத்தி முதல்வர் உத்தவ் தாக்கரேவிற்கு பாஜக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் பாலியல் புகார் தொடர்பாக, தேசியவாத காங்கிரஸ் கட்சி கூறுகையில் காவல்துறை விசாரணை நடைபெறுவதை பொருத்து முடிவு செய்யப்படும் என கூறியுள்ளது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Arun
First published: