கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். தயவு செய்து கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து பாதுகாப்பாக இருங்கள்” என ஆதித்ய தாக்கரே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
சிவசேனா கட்சியின் தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே. இவர் மகாராஷ்டிராவின் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் ஆதித்ய தாக்கரே தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “எனக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருந்ததால் நானாகவே சென்று பரிசோதனை செய்து கொண்டேன். எனக்கு கொரோனா பாசிட்டிவ் ஆகியுள்ளது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவுசெய்து கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.
On having mild symptoms of COVID, I had myself tested and I am COVID positive. I request everyone who came in contact with me to get themselves tested.
I urge everyone to realise that it is extremely important to not let your guard down. Please follow COVID protocols & stay safe
கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். தயவு செய்து கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து பாதுகாப்பாக இருங்கள்” என ஆதித்ய தாக்கரே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த இரு தினங்களாக தினசரி பாதிப்பு 25,000 என்ற அளவில் இருந்தது. இந்த நிலையில் இன்று 27,126 பேருக்கு புதிதாக அங்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் 92 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் மொத்த கொரோனா பாதிப்பு 24,49,147 ஆக உயர்ந்துள்ளது. 22,03,553 பேர் குணமடைந்துள்ள நிலையில், 53,300 பேர் இதுவரை உயிரிழந்திருக்கின்றனர். நோய்த்தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 1,91,006 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 3679 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு ஏற்கனவே மார்ச் 15 முதல் 21ம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கம் மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Published by:Arun
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.