Home /News /national /

ஓலா பைக்கை கழுதையில் கட்டி ஊர்வலமாக சென்ற வாடிக்கையாளர்.. சர்வீஸ் கிடைக்காததால் அதிருப்தி..

ஓலா பைக்கை கழுதையில் கட்டி ஊர்வலமாக சென்ற வாடிக்கையாளர்.. சர்வீஸ் கிடைக்காததால் அதிருப்தி..

பைக்கில் கழுதையை கட்டி ஊர்வலம்

பைக்கில் கழுதையை கட்டி ஊர்வலம்

OLA Electric Bikes | புதிய பைக்கில் ஏற்பட்ட கோளாறை ஓலா நிறுவனம் சரி செய்யாத ஆத்திரத்தில், பைக்கில் கழுதையைக் கட்டி அதன் உரிமையாளர் ஊர்வமாக சென்றுள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு நபர் தனது ஓலா வாகனத்தில் கழுதையைக் கட்டி இழுத்துச் சென்ற விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

    மகாராஷ்டிரா மாநிலம் பீட் பகுதியைச் சேர்ந்தவர் சச்சின் கிட்டே. இவர் அன்மையில் ஓலா நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த ஸ்கூட்டர் ஆறு நாள்களில் ரிப்பேராகி ஓடாமல் நின்றுள்ளது. இதையடுத்து இவர் ஓலா நிறுவனத்தை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார். மெக்கானிக்கை அனுப்பி செக் செய்வதாக ஓலா நிறுவனம் சச்சினிடம் தெரிவித்துள்ளது. ஆனால், யாரும் வந்து ஸ்கூட்டரை ரிப்பேர் செய்யவில்லை. இவர் தொடர்ச்சியாக கஸ்டமர் சர்வீசை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்து வந்துள்ளார்.ஆனால் அவர்களிடமிருந்து உரிய பதில் வரவில்லை.

    தனக்கு தீர்வு கிடைக்காததால் வெறுத்துப்போன சச்சின், தனது ஸ்கூட்டரில் கழுதை ஒன்றை கட்டி, ரோட்டில் ஊர்வலம் சென்றுள்ளார். அத்துடன் இந்த ஊர்வலத்தின் போது, தனது ஸ்கூட்டரில் ஓலா ஒரு ப்ராடு நிறுவனம், ஓலா கம்பெனி வாகனங்களை வாங்காதீர்கள் என பேனர் ஒன்றை வைத்து சென்றுள்ளார்.

    இவரது ஊர்வலத்தை பலர் வீடியோ எடுத்த நிலையில், இந்த விவகாரம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. லெட்ஸ்அப் மராத்தி ஊடகம் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் இதை செய்தியாக பதிவிட்டதை அடுத்து இது மேலும் வைரலாகியுள்ளது. இந்த ஸ்கூட்டரை கடந்தாண்டு செப்டெம்பர் மாதமே சச்சின் புக் செய்ததாகவும், டெலிவரியோ இந்தாண்டு மார்ச் 24ஆம் தேதி தான் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. வாங்கி ஆறே நாளில் வண்டி பழுதடைந்ததால், நுகர்வோர் ஆணையம் வரை சென்று புகார் அளிக்க சச்சின் முடிவெடுத்துள்ளார். அத்துடன் ஓலா நிறுவனத்தின் இது போன்ற செயல்பாடுகள் குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

    இதையும் படிங்க: நிலக்கரி பற்றாக்குறை... 12 மாநிலங்களில் பல மணி நேரம் மின்வெட்டு - இருளில் மூழ்குமா இந்தியா?

    அன்மையில் நாடு முழுவதும் எலக்ட்ரிக் பைக்குகள் தீப்பிடித்து விபத்துக்களாகும் சம்பவங்கள் அதிகம் காணப்படுகின்றன. இதுபோன்ற விபத்தில் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இது போன்ற தொடர் புகார்கள் காரணமாக சந்தையில் உள்ள தனது 1,441 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓலா நிறுவனம் திரும்பப்பெறுவதாக அறிவித்தது. ஓலாவைப் போலவே ஜிதேந்திரா, ஓகினவா ஆகிய நிறுவனங்களும் தங்களின் எலக்ட்ரிக் ஸ்கூட்ர்களை திரும்பப் பெறுவதாக அறிவித்து. எலக்ட்ரிக் ஸ்கூடர்களின் தரம் சார்ந்து எழும் புகார்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Electric bike, Ola, Viral Video

    அடுத்த செய்தி