• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மீனவர் விரித்த வலையில் அடித்த ஜாக்பாட்... ஒரே இரவில் கோடீஸ்வரன்

மீனவர் விரித்த வலையில் அடித்த ஜாக்பாட்... ஒரே இரவில் கோடீஸ்வரன்

அரிய வகை மீன்

அரிய வகை மீன்

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மீனவரின் வலையில் அரியவகை கோல் மீன்கள் சிக்கியதால், ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார். 

  • Share this:
    மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, மகாராஷ்டிராவை சேர்ந்த மீனவர்கள் கடந்த 28ம் தேதி கடலுக்கு சென்றனர். பல்கார் பகுதியை சேர்ந்த மீனவர் சந்திரகாந்த் தாரே, சக மீனவர்கள் 8 பேருடன் வாத்வான் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார்.

    சந்திரகாந்த் விரித்த வலையில் மீன்கள் சிக்கிய நிலையில், அதை படகுக்குள் எடுத்து பார்த்தபோது இன்ப அதிர்ச்சி அடைந்தார். கடல் தங்கம் என மீனவர்களால் அழைக்கப்படும் 157 கோல் மீன்கள் சந்திரகாந்த் விரித்த வலையில் சிக்கியிருந்தன.

    மருந்துகள், அழகு சாதன பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் இவ்வகை மீன்களுக்கு ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில், மவுசு அதிகம் என கூறப்படுகிறது. அதனால் அவற்றின் விலையும் மிக அதிகம். அதனால் அற்கு தங்க மனசுக்கார மீன் என்ற செல்லப்பெயரும் உண்டு.

    ஒரே இரவில் நூற்றுக்கணக்கான கோல் மீன்களுடன், சக மீனவர்களுடன் படகில் மகிழ்ச்சியாக கரை திரும்பினார் சந்திரகாந்த். அதற்குள் தகவலறிந்த தனியார் நிறுவனங்கள், மீன்களை ஏலம் எடுக்க போட்டி போட்டன. நீண்ட இழுபறிக்கு பின் உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களை சேர்ந்த நிறுவனங்கள் ஒரு கோடியே 33 லட்ச ரூபாய்க்கு, கோல் மீன்களை ஏலம் எடுத்தன.

    also Read : மணமகள் தேவை... டீக்கடைக்கு முன் போர்டு போட்ட நபருக்கு இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவிலிருந்து அழைப்பு

    சுற்றுச்சூழல் மாசு காரணமாக, கோல் மீன்கள் கிடைப்பது அரிதான நிலையில், அந்த மீன்களை பிடித்து ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆனதால், மகிழ்ச்சிக் கடலில் திளைத்துள்ளார் மீனவர் சந்திரகாந்த்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: