மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தின் நலசோபரா பகுதியைச் சேர்ந்தவர் 26 வயதான பிரபு விஷ்வகர்மா. இவரின் மனைவி அனிதா. இருவருக்கும் 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே மனைவி அனிதாவின் நடவடிக்கை மீது கணவர் பிரபுவுக்கு சந்தேகம் இருந்துவந்துள்ளது.
இது தொடர்பாக இருவருக்கும் இடையே தொடர் வாக்குவாதங்களும் சண்டைகளும் இருந்துவந்துள்ளன. இந்நிலையில், நேற்று காலை அன்று இருவருக்கும் இடையே இது தொடர்பாக ஏற்பட்ட தகராறு தீவிரமாகியுள்ளது. முதலில் வாக்குவாதமாக இருந்த சண்டை பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் கணவர் பிரபு ஆத்திரத்தில் அனிதாவின் முகத்தை மூடி கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.
இந்த கொடூர கொலையை செய்துவிட்டு, பின்னர் வழக்கம் போல தனது வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் பணியை முடித்துக்கொண்டு மாலை காவல் நிலைத்திற்கு சென்று கொலை செய்துவிட்டதாக சரணடைந்துள்ளார்.
இதையும் படிங்க: ’இவ்வளவு நேர்மையா...’ திருடிய சேலைகளை திருப்பித் தந்த திருட்டு கும்பல்... கடை உரிமையாளர் செய்த அந்த காரியம்..!
என்ன விவரம் என காவல்துறை கேட்ட போது தான் மனைவியை காலை கொலை செய்துவிட்டேன் என்றுள்ளார் பிரபு. ஷாக்கான போலீசார் வீட்டிற்கு சென்று அனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். கணவர் பிரபு மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Maharashtra, Murder