மகாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்காபத்தில் 24 வயது நபர் தனது மனைவிக்கு ஒழுங்காக புடவை கட்ட தெரியவில்லை எனக் கூறி தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டம் முகுந்த்நகர் பகுதியைச் சேர்ந்தவர் சமாதான் சாப்ளே. இவர் தனது வீட்டில் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார். இவரின் உடலை கைப்பற்றிய காவல்துறை அதை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி விசாரித்து வருகிறது.
தனது தற்கொலைக்கான காரணத்தை குறிப்பாக எழுதி அவர் வைத்திருந்ததை காவல்துறை கைப்பற்றியுள்ளது. அந்த குறிப்பில் அவர், தனது மனைவிக்கு ஒழுங்காக புடவை கட்ட தெரியவில்லை, ஒழுங்காக நடக்கத் தெரியவில்லை, பேசத் தெரியவில்லை என்பதால் வருத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார். அந்த நபருக்கு ஆறு மாதத்திற்கு முன்னர் தான் திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த நபரை விட அவரின் மனைவி ஆறு வயது மூத்தவராவார்.
இதையும் படிங்க:
கனவு பயத்தால் திருடிய சாமி சிலைகளை திரும்ப ஒப்படைத்த திருடர்கள் - கடவுள் மன்னிக்க கோரி கடிதம்..!!
இதேபோல், மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த மாதம் பள்ளி மாணவர் ஒருவர் பள்ளியின் சேர்மேன் மோசமாக திட்டியதால் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார். இந்த வழக்கில் அந்த சேர்மேனுக்கு முன் ஜாமின் வழங்க மும்பை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.