மகாராஷ்டிராவில் புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு? இன்று இரவு முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு

மகாராஷ்டிராவில் புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு? இன்று இரவு முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு

மாதிரிப் படம்

மகாராஷ்டிராவில் இன்று இரவு புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 • Share this:
  இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. தற்போது வரை கொரோனாவால் பரவல் கட்டுப்படுத்த முடியாமல் இருந்துவருகிறது. கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்தியாவில் இரண்டாவது அலை தொடங்கியுள்ள நிலையில், கடந்த ஆண்டை தற்போது வேகமாக பரவவருகிறது. இந்தியாவில் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படவில்லை என்றாலும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுகின்றன. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  குறிப்பாக, மகாராஷ்டிராவில் நாள் ஒன்றுக்கு கொரோனா பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 50,000-த்துக்கும் அதிகமாக உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்துள்ளது. அதனால், மருத்துவமனையில் நிரம்பி வழியும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால், அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே முழு ஊரடங்கை அமல்படுத்தும் எண்ணத்தில் இருந்துவந்தார். இதுதொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினர். இந்தநிலையில் இன்று இரவு புதிய கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  ஏப்ரல் 15-ம் தேதியிலிருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உத்தவ் தாக்கரே 8.30 மணிக்கு செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளார். இதுகுறித்து தெரிவித்த மகாராஷ்டிரா அமைச்சர் அஸ்லம் ஷேக், ‘கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தப்படுத்தப்படும். முதல்வர் உத்தவ் தாக்கரே ஏற்கெனவே, கொரோனா சிறப்புக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். எதிர்கட்சிகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மாநிலம் முழுவதும் ஒரே நடைமுறை அமல்படுத்தப்படும்’ என்று தெரிவித்தார்.
  \

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: