ஹோம் /நியூஸ் /இந்தியா /

விடிய விடிய சமையல்.. 2 லட்சம் பேருக்கு அன்னதானம்.. மகாராஷ்டிரத்தில் நெகிழ்ச்சி சம்பவம்..!

விடிய விடிய சமையல்.. 2 லட்சம் பேருக்கு அன்னதானம்.. மகாராஷ்டிரத்தில் நெகிழ்ச்சி சம்பவம்..!

விவேகானந்தர் ஆசிரமம்

விவேகானந்தர் ஆசிரமம்

100 டிராக்டர்களில் எடுத்துச் செல்லப்பட்ட 500 குவிண்டால் உணவை 3 ஆயிரம் தன்னார்வலர்கள் பொதுமக்களுக்கு வழங்கினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Maharashtra, India

மகாராஷ்டிராவில் ஒரே நேரத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் ஹிவாரா என்ற பகுதியில் விவேனகானந்தர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது, இதனை விமரிசையாக கொண்டாட நினைத்த ஆசிரம நிர்வாகிகள், மக்களுக்கு இலவச உணவை பிரசாதமாக வழங்க முடிவு செய்தனர். இதற்கான பணிகள் சனிக்கிழமை அதிகாலையில் இருந்தே தொடங்கியது. விடியவிடிய தயாரான பூரி, காய்கனி கூட்டு ஆகியவை பிரசாதமாக அங்கு வந்த பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. ஆசிரமத்தில் தயாரிக்கப்பட்ட உணவுகள், பெரிய திடலிலுக்கு கொண்டு வரப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது.

100 டிராக்டர்களில் எடுத்துச் செல்லப்பட்ட 500 குவிண்டால் உணவை 3 ஆயிரம் தன்னார்வலர்கள் பொதுமக்களுக்கு வழங்கினர். மிகவும் நேர்த்தியாக 2 லட்சம் பேருக்கும் சாப்பாடு பரிமாறப்பட்டது. பிரமாண்டமாக தயாரான உணவுகளை பொதுமக்கள் பிரசாதமாக வயிறார சாப்பிட்டுவிட்டு விழா ஏற்பாட்டாளர்களை வாழ்த்தினர்.

First published:

Tags: Food, Maharashtra, Swami Vivekananda