• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • சச்சின், லதா மங்கேஷ்கர் உள்ளிட்ட பிரபலங்கள் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக நெருக்கடியால் ட்வீட் செய்தார்களா? - மகாராஷ்டிர அரசு விசாரணை!

சச்சின், லதா மங்கேஷ்கர் உள்ளிட்ட பிரபலங்கள் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக நெருக்கடியால் ட்வீட் செய்தார்களா? - மகாராஷ்டிர அரசு விசாரணை!

சச்சின் டெண்டுல்கர், , லதா மங்கேஷ்கர்,

சச்சின் டெண்டுல்கர், , லதா மங்கேஷ்கர்,

சாய்னா மற்றும் அக்‌ஷய் ஆகியோர் பதிவிட்ட ட்வீர்களில் இருந்த தகவல்கள் ஒரே மாதிரியானது. சுனில் ஷெட்டி பாஜக தலைவர் ஒருவரை டேக் செய்துள்ளார்.

  • Share this:
வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக சச்சின் உள்ளிட்ட பிரபலங்கள் ட்வீட் செய்தது பாஜகவின் அழுத்தம் காரணமாகவா என்பது குறித்து விசாரிக்க இருப்பதாக மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் 2 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவாக சிறிது நாட்களுக்கு முன்னர் அமெரிக்க பாப் பாடகி ரிஹானாவும், சூழலியல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க்கும் ட்விட்டரில் வெளியிட்ட பதிவு நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது..

இது எங்கள் உள்நாட்டு விவகாரம், வெளி நபர்கள் இதில் தலையிடுவது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என கருத்துக்களை கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், பழம் பெரும் பாலிவுட் பாடகி லதா மங்கேஷ்கர், நடிகர்கள் சுனில் ஷெட்டி, அக்‌ஷய் குமார், பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் உள்ளிட்டோர் பதிலடியாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டனர்.

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்போர் பிரபலங்களின் கருத்து உள்நோக்கம் கொண்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

இதனிடையே பாஜகவின் அழுத்தம் காரணமாக பிரபலங்கள் கருத்து பதிவிட்டார்களா என்பது குறித்து உளவுத்துறை மூலம் விசாரிக்கப்படும் என்று மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்தார்.

இது தொடர்பாக மகாராஷ்டிர காங்கிரஸ் பொதுச்செயலாளர் சச்சின் சாவந்த் , உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கை சந்தித்து பேசியுள்ளார்.

சச்சின் சாவந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரபலங்கள் வெளியிட்ட ட்வீட்கள் ஒற்றுமையாக இருப்பது போல தோன்றுகிறது. சாய்னா மற்றும் அக்‌ஷய் ஆகியோர் பதிவிட்ட ட்வீர்களில் இருந்த தகவல்கள் ஒரே மாதிரியானது. சுனில் ஷெட்டி பாஜக தலைவர் ஒருவரை டேக் செய்துள்ளார். இதன் மூலம் ஆளும் கட்சிக்கும், பிரபலங்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக தெரிகிறது. பாஜக தரப்பில் இருந்து ஏதேனும் அழுத்தம் வந்ததா என விசாரிக்க வேண்டும். என தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: