மகாராஷ்டிராவில் மாலை 5 முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு?

மகாராஷ்டிராவில் மாலை 5 முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு?

ஊரடங்கு

50 பேருக்கு மேல் அனுமதிக்கும் திருமண மண்டபங்களுக்கு அதிக அளவாக ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படுவது குறித்தும் அரசு ஆலோசிப்பதாக அவர் தெரிவித்தார்.

  • Share this:
மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 12 மணி நேர இரவு ஊரடங்கை மாநில அரசு அமல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக அம்மாநில நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத்துறை அமைச்சர் விஜய் வதேட்டிவார் தெரிவித்தார்.

இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த நிலையில் பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்து மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பரவல் கணிசமாக அதிகரித்துள்ளது. அங்கு தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக 5,000ஐ கடந்துள்ளது. மேலும் பாஸிட்டிவிட்டி ரேட் இரு மடங்காக உயர்ந்துள்ளது. அத்துடன் ஒரே மாதத்தில் 6 அமைச்சர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதில் ஒரு அமைச்சருக்கு 2வது முறையாக தொற்று பாதிப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து தொற்று பரவலை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை அமல்படுத்த மகாராஷ்டிர அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில் அம்மாநில நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத்துறை அமைச்சர் விஜய் வதேட்டிவார் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து மாநில அரசு ஆலோசித்து வருவதாக கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக அமைச்சர் விஜய் வதேட்டிவார் கூறும்போது மாலை 5 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த வாய்ப்பிருப்பதாகவும், இது தொடர்பாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அடுத்த வாரத்தில் ஆலோசித்து முடிவை அறிவிப்பார் என தெரிவித்தார்.

மேலும் 50 பேருக்கு மேல் அனுமதிக்கும் திருமண மண்டபங்களுக்கு அதிக அளவாக ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படுவது குறித்தும் அரசு ஆலோசிப்பதாக அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் கூறும்போது, “விதர்பா பகுதியில் தொற்று பரவல் திடீரென அதிகரித்துள்ளது. நாக்பூரில் கூட தொற்று அதிகரித்துள்ளது. அரசு ஏற்கனவே அமராவதி, வார்தா மற்றும் யவத்மால் பகுதிகளில் பகுதி நேர ஊரடங்கை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. தொற்று அதிகரித்தால் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும். மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த பகுதி சூழலுக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் எஅன்வும் அவர் தெரிவித்தார்.

அதே போல காய்கறி சந்தைகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சந்தைகள் செயல்பட கட்டுப்பாடு விதிக்கப்படலாம் எனவும் தெரிவித்தார்.

கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த மும்பை மேயர் கிஷோரி பத்னேகர், பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற தவறினால் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: