• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • சுற்றுலாப் பயணிகளுக்கு சிவப்பு கம்பளமிடும் மகாராஷ்டிரா - சூப்பரான 4 பலே திட்டங்கள்!

சுற்றுலாப் பயணிகளுக்கு சிவப்பு கம்பளமிடும் மகாராஷ்டிரா - சூப்பரான 4 பலே திட்டங்கள்!

மாதிரி படம்

மாதிரி படம்

வேளாண் சுற்றுலா என்ற புதிய சுற்றுலாவை அறிமுகப்படுத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

  • Share this:
கொரோனா பேரிடருக்குப் பிறகு சுற்றுலாத்துறை வேகமெடுத்துள்ளது. 2 ஆண்டுகளாக முடங்கிக்கிடந்த சுற்றுலா தளங்களும், இயல்பு நிலையை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளன. தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பிற மாநில அரசுகளும் சுற்றுலாத் துறை மூலம் வருவாயை அதிகப்படுத்த பல்வேறு சிறப்புத் திட்டங்களையும் செயல்படுத்த தொடங்கியுள்ளன. மகாராஷ்டிரா மாநில அரசு, அம்மாநிலத்தில் சுற்றுலாவை மேம்படுத்த 4 சூப்பரான திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

1. பீச் ஷேக் கொள்கை:

குடிசைகள், போர்ட்டபிள் கேபின்கள், டெக்-பெட்கள், குடைகள் போன்றவற்றை தற்காலிகமாக கட்டுவதற்கு சுற்றுலாத் துறை சிறப்பு அனுமதிகளை வழங்குகிறது. அதேநேரத்தில் கடற்கரைகளின் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் விதிமுறைகளை வகுத்து, அதற்கேற்ப கட்டுமானங்களை கட்டுவதற்கு அனுமதி கொடுக்கப்பட உள்ளது. குறிப்பாக, ரத்னகிரி (குஹாகர், அரேவாரே), சிந்துதுர்கா (குங்கேஷ்வர், தர்காலி), ராய்காட் (வர்சோலி, திவேகர்), பால்கர் (கெலவா மற்றும் போர்டி) ஆகிய இடங்களில் இந்தக் கொள்கை செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் ஒவ்வொரு கடற்கரையிலும் பத்து கடற்கரை குடிசைகள் மட்டுமே கட்ட அனுமதிக்கப்படும். கடற்கரை குடிசைகளில் 80 சதவீத வேலைகள் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்படும் மற்றும் உரிம காலம் மூன்று ஆண்டுகள்.

2. வேளாண் சுற்றுலாக் கொள்கை:

வேளாண் சுற்றுலா என்ற புதிய சுற்றுலாவை அறிமுகப்படுத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. விவசாயத்துக்கு புத்துயிர் ஊட்டுவதற்கும், விவசாய கல்வி தொடர்பான அனுபவ கல்வியை பெறுவதற்கு ஏற்ப இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. வேளாண் சுற்றுலா மையங்கள் அமைப்பவர்கள் சுற்றுலாத்துறையிடம் இருந்து அனுமதி பெற வேண்டும். அவர்களுக்கு அரசு சார்பில் சிறப்பு கடனுதவியும் வழங்கப்படும்.

3. கேரவன் சுற்றுலா:

சுற்றுலா செல்பவர்கள் புதிய இடங்களில் தங்குவதை தவிர்க்கின்றனர். தொற்று நோய் பரவல் மற்றும் பிரைவசியைக் கருத்தில் கொண்டு ஹோட்டல்கள் மற்றும் ஓய்வு விடுதிகளில் தங்குவதை பலர் விரும்புவதில்லை. இதனைக் கருத்தில் கொண்டு மகாராஷ்டிரா அரசு கேரவன் டூரிஸத்தை அறிமுகப்படுத்த முடிவெடுத்துள்ளது. கேரவன் ஆப்ரேட்டர்களுக்கு முத்திரைக் கட்டணம் மற்றும் மின் கட்டணம் விலக்கு வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கேரவன் வாகனங்களுக்கு கடன் பெற தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்படும்.

Also read... “பெரிய பயணங்களும் முதல் அடியிலே தொடங்கும்”- ஆனந்த் மஹிந்திரா ஷேர் செய்த மோட்டிவேஷனல் வீடியோ!

4. ஒற்றைச் சாளர அனுமதிக் கொள்கை:

ஹாஸ்பிட்டாலிட்டி அனுமதிக்கு, பல்வேறு லைசென்ஸ்கள் பெற வேண்டிய சூழல் இருக்கிறது. இந்த நடைமுறை சிக்கலை தவிர்க்கும் விதமாக ஆன்லைன் மூலம் அனைத்து லைசென்ஸூகளுக்கும் விண்ணப்பிக்கும் வசதியையும அம்மாநில அரசு செயல்படுத்த உள்ளது. இதன்மூலம் லைன்சென்ஸ் பெறுவதற்கான தாமதம் குறைந்து செயல்திறன் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா அரசின் இந்த கொள்கை அம்மாநிலத்தில் சுற்றுலாத் துறையை புதிய உயரத்துக்கு எடுத்துச் செல்லும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: