மஹாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பட்நாவிஸ்-க்கு ஆளுநர் அழைப்பு!

மஹாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பட்நாவிஸ்-க்கு ஆளுநர் அழைப்பு!
தேவேந்திர பட்னவிஸ்
  • News18
  • Last Updated: November 9, 2019, 7:36 PM IST
  • Share this:
மஹாராஷ்டிராவில் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்த நிலையில், தனிப்பெரும் கட்சியான பாஜகவுக்கு ஆட்சியமைக்க மாநில ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

மஹாராஷ்ட்ரா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அக்டோபர் 24-ம் தேதி வெளியானது. பாஜக 105 தொகுதிகளிலும், சிவசேனா 56 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும், காங்கிரஸ் 44 இடங்களிலும் வென்றன. எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாஜக - சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவி வேண்டும் என சிவசேனா முரண்டு பிடிக்கத் தொடங்கியதால், ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. 15 நாட்களாக நீடித்த இந்த பிரச்னையில் இதுவரை முடிவு எட்டப்படவில்லை.


நேற்று முன்தினம் மகாராஷ்ட்ரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்த தேவேந்திர பட்னாவிஸ், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பட்னாவிஸ், தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தார். தேர்தல் முடிவுகள் வெளியான தினமே, அரசு அமைப்பதற்கான அனைத்து வாய்ப்புகளும் திறந்தே இருப்பதாக உத்தவ் தாக்கரே பேசியது மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்ததாகவும் அவர் கூறினார்.

பாஜக கூட்டணி ஆட்சியமைக்க மக்கள் வாக்களித்துள்ள நிலையில் உத்தவ் தாக்கரே ஏன் அவ்வாறு கூறினார் என்பது தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவியை பங்கிட்டு கொள்வது பற்றி எப்போதும் விவாதிக்கப்படவே இல்லை என்றும், அமித் ஷாவும், நிதின் கட்கரியும் கூட அவ்வாறு எந்த முடிவும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்ததாகவும் பட்னாவிஸ் கூறினார்.இந்த நிலையில், ஆட்சியமைக்க பாஜகவுக்கு மாநில ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். வரும் 11-ம் தேதி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நீருபிக்கவும் ஆளுநர் அவகாசம் அளித்துள்ளார்.

நாளை பட்நாவிஸ் முதல்வராக பதவியேற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான 145 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவைப் பெற பாஜக தரப்பில் தீவிர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
First published: November 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்