ஹோம் /நியூஸ் /இந்தியா /

இனி கல்லூரியில் சேர வாக்காளர் எண் அவசியம் - மகாராஷ்டிரா அரசின் அதிரடி முடிவு

இனி கல்லூரியில் சேர வாக்காளர் எண் அவசியம் - மகாராஷ்டிரா அரசின் அதிரடி முடிவு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கல்லூரியில் மாணவர் சேர்க்கையின் போது 18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்க மகாராஷ்டிரா அரசு திட்டமிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Maharashtra, India

இந்தியாவில் 18 வயது நிரம்பிய குடிமக்கள் அனைவரும் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். எனவே, ஆண்டுதோறும் இந்திய தேர்தல் ஆணையம் தொடர்ச்சியாக வாக்காளர் சிறப்பு முகாம்களை நடத்தி வயது வந்த புதிய வாக்காளர்களை விடுபடாமால் சேர்த்து வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு முகாம்கள் நடத்துவதுடன், தேசிய வாக்காளர் சேவை போர்ட்டல் https://www.nvsp.in அல்லது Voters helpline கைப்பேசி செயலி மூலமாகவும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வழிவகை செய்துவருகிறது.

ஜனநாயக நாட்டின் ஆணிவேராகக் கருதப்படுவது, தேர்தலும் அதில் குடிமக்களின் பங்களிப்பும்தான். அதேவேளை, நாட்டில் இன்னும் கணிசமான பகுதிகளில் தேர்தல் வாக்குப்பதிவு செய்ய மக்களிடம் வாக்களிக்கும் ஆர்வம் மிகக் குறைவாகவே உள்ளது.

குறிப்பாக நகர்ப்புறங்களிலும், இளைஞர்கள் மத்தியிலும் தேர்தலில் வாக்களிக்கும் ஆர்வம் ஒப்பீட்டு அளவில் குறைவாக உள்ளது. இதை சீர் செய்வதற்கு மத்திய மாநில அரசுகளும், தேர்தல் ஆணையமும் பல விழிப்புணர்வு நடவடிக்கை எடுத்து வருகின்றன.

அவ்வாறு முக்கிய நகர்வை மகாராஷ்டிரா அரசு மேற்கொள்ளவுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உயர் கல்வித்துறை சார்பில் விழா ஒன்று நடைபெற்றது. இதில் மாநில ஆளுநர் பகத்சிங் கோஷியாரி, முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், உயர்கல்வி அமைச்சர் சந்திரகாந்த் பாடீல் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது உயர் கல்வி அமைச்சர் முக்கிய தகவலை தெரிவித்தார். மகாராஷ்டிரா மாநிலத்தில் மாணவர்களாகிய இளம் வாக்காளர்களை சேர்க்க அரசு இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: வேலையில் ஒழுங்கீனம்..மூன்று நாள்களுக்கு ஒரு ரயில்வே ஊழியர் பணியில் இருந்து நீக்கம்!

சுமார் 50 லட்சம் வாக்காளர்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 32 லட்சம் பேர் தான் இதுவரை பெயரை இணைத்துள்ளனர். எனவே இனி வரும் காலத்தில் கல்லூரியில் மாணவர் சேர்க்கையின் போது 18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்கவுள்ளோம். இதற்கான உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும் என்றார். மேலும், மாநிலத்தில் புதிய கல்வி கொள்கையை விரைவாக அமல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

First published:

Tags: Maharashtra, Voter List