ஹோம் /நியூஸ் /இந்தியா /

”இனி ஹலோக்கு பதில் வந்தே மாதரம்”- ஊழியர்களுக்கு மகாராஷ்டிரா அரசு அதிரடி உத்தரவு!

”இனி ஹலோக்கு பதில் வந்தே மாதரம்”- ஊழியர்களுக்கு மகாராஷ்டிரா அரசு அதிரடி உத்தரவு!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

மகாராஷ்டிராவில் இனி அரசு ஊழியர்கள் தொலைபேசியில் பேசுகையில் ”ஹலோ” என்று சொல்லாமல் வந்தேமாதரம் என்று தான் சொல்ல வேண்டும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Maharashtra, India

மகாராஷ்டிரா அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் இனி கைப்பேசி அழைப்புகளை மேற்கொள்ளும் போது அரசு ஊழியர்கள் ”ஹலோ” என்று தொடங்காமல் அதற்குப் பதில் வந்தேமாதரம் என்று தான் சொல்லவேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இந்த வந்தேமாதரம் பிரச்சாரம் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 75வது ஆண்டு சுதந்திர அமிர்த பெருவிழாவில் ஒரு பகுதியாக மாநில முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது.  மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் கலாச்சார துறை அமைச்சர் சுதிர் முங்கதிவார் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை காலை வார்தாவில் வந்தேமாதரம் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தனர்.

மேலும் இந்த அரசு தீர்மானம் பொது நிர்வாகத் துறையால் அனைத்து அரசு அலுவலகத்திற்கு வழங்கப்பட்டது. அதில் அரசு, அரசு சார்ந்த, உள்ளூர் நிர்வாக அமைப்புகள், அரசு சார்ந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் இதர நிறுவனங்களுக்கும் இந்த தீர்மானம் படி, இனி மக்களிடம் இருந்து கைப்பேசி அழைப்புகளை பெறும் போது ”ஹலோ” என்று உரையாடலைத் தொடங்காமல் ”வந்தே மாதரம்” என்று தொடங்க வேண்டும்.

இதனையடுத்து, மக்களிடம், அரசு அதிகாரிகளிடம், சக ஊழியர்களிடம் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் வந்தேமாதரம் என்ற சொல்லைப் பயன்படுத்தும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. வந்தேமாதரம் பிரசாரத்தைத் தொடங்கி வைத்து துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் பேசுகையில், வந்தேமாதரம் என்ற சொல் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் பெரும் பங்கு வகித்ததாக கூறினார். மேலும் சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங் பேசிய கடைசி வார்த்தை வந்தேமாதரம் .

வந்தேமாதரம் என்ற சொல்லைத் தினசரி வாழ்க்கையில் கொண்டுவர வேண்டும். இன்று முதல் வந்தேமாதரம் இயக்கத்தைத் தொடங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

Also Read : காந்தி பிறந்த நாளில் 3,000 கிமீ பாதயாத்திரை தொடக்கம்.. பீகார் அரசியலுக்கு அடித்தளம் போடும் பிரசாந்த் கிஷோர்!

இதனை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அபு ஆஸ்மி கடுமையாக எதிர்த்துள்ளார். பால் தாக்கரேவின் காலத்திலிருந்து ஜெய் மகாராஷ்டிரா என்று தான் அழைத்து வந்ததாகவும் தற்போது இவர்கள் மாற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார். மேலும் முஸ்லிம்கள் வந்தேமாதரம் என்ற சொல்லை அவர்களிம் மத நம்பிக்கைகளுக்கு எதிராகச் சொல்லமாட்டார்கள். இந்த செயல் மக்களிடையே வேற்றுமையை உண்டு பண்ணுவதாகவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Maharashtra