Home /News /national /

தீ விபத்தில் உயிரிழந்த 10 குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்தது மராட்டிய அரசு

தீ விபத்தில் உயிரிழந்த 10 குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்தது மராட்டிய அரசு

உத்தவ் தாக்ரே

உத்தவ் தாக்ரே

அவசரப் பிரிவில் இருந்து 7 குழந்தைகள் மீட்கப்பட்டனர்.

    மகாராஷ்டிரா மாநில பொது மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்த 10 குழந்தைகளுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலம் பண்டாரா மாவட்டத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் இன்று அதிகாலை 2 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. இதில் உடல்நலக் குறைவுடன் பிறந்த 10 பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி இறந்தனர். அவசரப் பிரிவில் இருந்து 7 குழந்தைகள் மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.



    இந்நிலையில் உயிரிழந்த 10 பச்சிளம் குழந்தைகளின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என மாகாராஷ்டிரா மாநில அரசு அறிவித்துள்ளது. தவிர விபத்துக்கான காரணம் குறித்து, தீவிர விசாரணையில் இறங்கியிருக்கிறார்கள் காவல்துறையினர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Fire accident, Maharashtra

    அடுத்த செய்தி