முகப்பு /செய்தி /இந்தியா / 512 கிலோ வெங்காயம் விலை வெறும் ரூ.2 தான்... 70 கி.மீ பயணித்து வந்த விவசாயிக்கு நேர்ந்த சோகம்..!

512 கிலோ வெங்காயம் விலை வெறும் ரூ.2 தான்... 70 கி.மீ பயணித்து வந்த விவசாயிக்கு நேர்ந்த சோகம்..!

காசோலை

காசோலை

500 கிலோ வெங்காயம் விளைவிப்பதற்கு ரூ.40,000 வரை செலவு செய்துள்ளதாக விவசாயி கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Maharashtra, India

மகாராஷ்டிராவில் சோலாபூர்  மாவட்டத்தில் உள்ள போர்கான் கிராமத்தில் 58 வயதான ராஜேந்திர துக்காராம் சவான்  விவசாயம் செய்துவருகிறார். அவருக்கு விளைச்சலில்  கிடைத்த 512 கிலோ வெங்காயத்தை 70 கிலோ மீட்டர் கடந்து விற்பனைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

வெங்காயத்தைக் கிலோ 1 ரூபாய் என்ற விதத்தில் 512 ரூபாய்க்கு வாங்கியுள்ளனர். அதில் வெங்காயத்தை ஏற்றிச் சென்ற செலவு மற்றும் எடைக்கான செலவு மட்டும் 509 ரூபாய் ஆகியுள்ளது. இதர செலவுகள் போக அவருக்கு 2.49 ரூபாய் தான் மீதம் இருந்துள்ளது. 

மீதமுள்ள  2 ரூபாயும்  சில்லரையாக வழங்கப்படாமல் அவருக்குக் காசோலை வழங்கப்பட்டுள்ளது. மேலும்  காசோலையை 15 நாட்களுக்குள் வங்கியில் செலுத்தி அந்த 2 ரூபாயை பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், அவருக்குக் கால அவகாசம் கடந்தே காசோலை கையில் கிடைத்துள்ளது.

இதனால் அந்த விவசாயி மிகவும் சோகமும் பெரும் நஷ்டமும் அடைந்துள்ளார். 500 கிலோ வெங்காயம் விளைவிப்பதற்கு ரூ.40,000 வரை செலவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார். கடந்த ஆண்டு கிலோ வெங்காயம் 20 ரூபாய்க்கு விற்பனை செய்வதாகவும் இது போல் வெறும் 2 ரூபாய்க்கு 512 கிலோ வெங்காயத்தை வாங்கினால் விவசாயிகள் என்ன செய்வது என்று கவலையுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது மகாராஷ்டிராவில் வெங்காயத்தின் வரவு அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதில் தரமான வெங்காயம் என்பது குறைந்த அளவிலேயே கிடைப்பதால் அதனின் விலையும் குறைந்து கொண்டே போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் வெங்காயத்தில் கொள்முதல் விலை சந்தையில்  மிகச் சரிவைக் கண்டுள்ளதாகச் தெரிவித்துள்ளனர்.

Also Read : கொரோனாவுக்குப் பின் தூக்கமின்றி தவிக்கும் கோடிக்கணக்கான இந்தியர்கள்... ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!

இது தொடர்பாக, போர்கான் கிராம பஞ்சாயத்து அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளனர். அதில் விவசாயிகளுக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு உரிய இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். வெங்காயத்தின் விலை சரிவுக்கு அரசு உடனடியாக தலையிட்டு விலையைச் சரிசெய்ய நடவடிக்கை வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாகவுள்ளது.

First published:

Tags: Farmers, Maharashtra, Onion, Onion Price