பால் விற்பனைக்காக 30 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெலிகாப்டரை வாங்கிய விவசாயி..

பால் விற்பனைக்காக 30 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெலிகாப்டரை வாங்கிய விவசாயி..

helicopter

மகாராஷ்டிராவின் பிவாண்டி பகுதியை சேர்ந்த பால் விற்கும் விவசாயி ஒருவர் பால் விற்கவும், நாடு முழுவதும் தனது பால் வணிகத்தை விரிவுபடுத்தவும் ரூ.30 கோடி மதிப்புள்ள ஹெலிகாப்டரை வாங்கியுள்ளார்.

  • Share this:
மகாராஷ்டிராவின் பிவாண்டி பகுதியை சேர்ந்த பால் விற்கும் விவசாயி ஒருவர் பால் விற்கவும், நாடு முழுவதும் தனது பால் வணிகத்தை விரிவுபடுத்தவும் ரூ.30 கோடி மதிப்புள்ள ஹெலிகாப்டரை வாங்கியுள்ளார்.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயி, ஜனார்தன் போயர். இவருக்கு சுமார் 100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இவர், சமீபத்தில் பால் விற்கும் தொழிலை தொடங்கியுள்ளார். ஜனார்தன் இதற்காக ஹரியானா, பஞ்சாப், குஜராத் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு பயணம் செய்ய வேண்டியுள்ளது. இதனால் அவர் தினமும் நீண்ட நேரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. 

இதனையடுத்து தினமும் பயணம் செய்து பால் விற்பனை தொழிலை மேற்கொள்ள சிரமப்பட்டுள்ளார். இதுகுறித்து ஒருநாள் அவர் தனது நண்பருடன் ஆலோசித்துள்ளார். அப்போது அவர் பரிந்துரைத்ததன் பேரில், ஒரு ஹெலிகாப்டரையே சொந்தமாக வாங்க முடிவு செய்துள்ளார். அதன்படி ரூ.30 கோடி மதிப்புள்ள ஹெலிகாப்டரை வாங்கியுள்ளார். இது தனது பணியை மிகவும் வசதியாக மாற்றும் என ஜனார்தன் நம்பிக்கையுடன் கூறுகிறார். தனது விவசாயத்திற்கும் பால் வணிகத்திற்கும் ஹெலிகாப்டர் அவசியம் தேவை என்று ஜனார்தன் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதனிடையே சோதனை ஓட்டத்திற்காக ஹெலிகாப்டர் ஜனார்தனின்  கிராமத்திற்கு அனுப்பப்பட்டது. அந்த ஹெலிகாப்டரில் அவர் தனது கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் சில கிராமவாசிகளையும் அழைத்துச் சென்றுள்ளார். இந்த சோதனை ஓட்டம் வெற்றியடைந்ததையடுத்து ஹெலிகாப்டர் மார்ச் 15-ம் தேதி ஜனார்தனிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதற்காக சுமார் 2.5 ஏக்கர் நிலப்பரப்பில் ஹெலிபேட் ஒன்றை உருவாக்கவும் ஜனார்தன்திட்டமிட்டுள்ளார். மேலும் ஹெலிகாப்டருக்கு ஒரு கேரேஜ், ஒரு பைலட் அறை மற்றும் ஒரு தொழில்நுட்ப அறையும் கட்ட உள்ளனர். 

தனிப்பட்ட பயணங்களுக்கு ஹெலிகாப்டரைப் பயன்படுத்துவது தற்போது ஒரு பேஷனாகவே மாறிவிட்டது. கடந்த ஆண்டு, கேரளாவை சேர்ந்த வயதான தம்பதியினர் தங்கள் பேரனின் திருமணத்தில் கலந்து கொள்ள ஹெலிகாப்டரில் பறந்தனர். 90 வயதான முன்னாள் ஐ.ஆர்.டி.எஸ் அதிகாரியும் அவரது 85 வயது மனைவியும் ஹெலிகாப்டரில் கேரளாவின் பாலக்காட்டில் இருந்து பெங்களூருக்கு சென்றனர். சனிக்கிழமை சென்று விட்டு அடுத்த திங்கள்கிழமை ஊர் திரும்பினர். வயதான தம்பதியினர் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலில் இருந்து தப்பிக்க அவரது பேரனே அந்த ஹெலிகாப்டரை ஏற்பாடு செய்திருந்தார். 
Published by:Ram Sankar
First published: