• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மஹாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாக்களித்தார்

மஹாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாக்களித்தார்

குடும்பத்துடன் பன்வாரிலால் புரோஹித்

குடும்பத்துடன் பன்வாரிலால் புரோஹித்

  • News18
  • Last Updated :
  • Share this:
    மஹாராஷ்டிரா மாநிலத்தின் இன்று சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கும் நிலையில், மேற்கு நாக்பூர் தொகுதியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது குடும்பத்துடன் வாக்களித்தார்.

    மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டப்பேரவைகளுக்கு இன்று தேர்தல் நடக்கும் நிலையில், காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து வருகிறது.

    பாஜக - சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெறும் மஹாராஷ்டிரா மற்றும், பாஜக ஆட்சி நடக்கும் ஹரியானா ஆகிய இரண்டு மாநில சட்டப்பேரவைகளுக்கு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    288 உறுப்பினர்களை கொண்ட மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக- சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மற்றொரு அணியாக போட்டியிடுகிறது.

    90 உறுப்பினர்களை கொண்ட ஹரியானாவில், ஆளும் பாஜக, காங்கிரஸ், ஜனநாயக் ஜனதா ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இந்த நிலையில், வாக்குப்பதிவு காலை 7 மணியளவில் தொடங்கிய நிலையில், இதற்காக காலையிலேயே வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களிக்க வந்தனர்.

    மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகத், திரை நட்சத்திரங்கள் வாக்களித்தனர். தற்போது வரை அமைதியான வாக்குப்பதிவு நடந்து வருகிறது.



    மேற்கு நாக்பூர் தொகுதியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: