மகாராஷ்டிராவில் சாலையில் பாலைக் கொட்டி உற்பத்தியாளர்கள் போராட்டம்

மகாராஷ்ட்ராவில் பாலை சாலையில் கொட்டி உற்பத்தியாளர்கள் போராட்டம்

மகாராஷ்ட்ராவில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 2-ஆவது நாளாக போராட்டம் நீடித்தது.

  • Share this:
    மகாராஷ்ட்ரா அரசு பால்கொள்முதல் விலையை லிட்டருக்கு 17 ரூபாயில் இருந்து 30 ரூபாயாக உயர்த்த வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் கோரிவருகின்றனர்.

    மத்திய அரசின் 10,000 டன் பால் பவுடர் ஏற்றுமதி திட்டத்திற்கு தடை கோரியும் 2--வது நாளாக போராட்டம் நடைபெற்றுவருகிறது.

    படிக்க: வேண்டாம் N-95 முகக் கவசங்கள் - மத்திய அரசு விடுத்த எச்சரிக்கை

    படிக்க: கொரோனா தடுப்பூசி விநியோகத்திற்கு நாள் குறித்த ரஷியா


    படிக்க: த்ரிஷாவுடன் திருமணமா? நடிகர் சிம்பு தரப்பு விளக்கம்

    அரசு மற்றும் தனியார் பால் பண்ணைகள் இதில் பங்கேற்றுள்ளன. இந்நிலையில், மும்பை உள்பட பல்வேறு பகுதிகளி்ல் போராட்டக்காரர்கள் லட்சக்கணக்கான லிட்டர் பாலை சாலையில் கொட்டி எதிர்ப்பை பதிவு செய்துவருகின்றனர்.
    Published by:Sankaravadivoo G
    First published: