Lockdown: மகாராஷ்டிராவில் ஜூன் 1ம் தேதி முதல் படிப்படியாக ஊரடங்கு தளர்வு?

ஊரடங்கு தளர்வு

பாசிட்டிவிட்டி ரேட் 10% அதிகமாக உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை மகாராஷ்டிராவில் 23 ஆக உள்ளது. அந்த வகையில் தமிழகம் 37 மாவட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளது.

  • Share this:
கொரோனா வைரஸ் பரவலின் முதல் அலையிலும் சரி, இரண்டாவது அலையிலும் சரி, பாதிப்பு - உயிரிழப்பு என இரண்டிலும் நாட்டிலேயே முதன்மையான மாநிலமாக இருப்பது மகாராஷ்டிரா தான்.

இதன் காரணமாக அங்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஊரடங்கு போடப்பட்டுள்ள நிலையில் தற்போது அங்கு தினசரி பாதிக்கப்படுவோர் மற்றும் பாசிட்டிவிட்டி ரேட் சரியத் தொடங்கியிருக்கிறது. இதன் காரணமாக ஜூன் 1ம் தேதி முதல் ஊரடங்கை படிப்படியாக தளர்த்துவது குறித்து மாநில அரசு பரிசீலிக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோப் சூசகமாக தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாத மத்தியில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலை தொடங்கியது. இதன் காரணமாக ஏப்ரல் 5ம் தேதி மகாராஷ்டிராவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது, பின்னர் ஏப்ரல் 15ம் தேதி தளர்வுகள் ஏதும் அளிக்கப்படாமல் முழு ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்தப்பட்டது. தற்போது வரை அங்கு முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சமீக நாட்களாக அங்கு தினசரி கொரோனா பாதிப்பு மற்றும் பாசிட்டிவிட்டி ரேட் சரியத் தொடங்கி உள்ளது.

இதனிடையே ஊரடங்கு தளர்வு குறித்து சூசகமாக பேசியிருக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோப், டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், “மே மாத இறுதியில் நிலைமை குறித்து மகாராஷ்டிர அரசு ஆராயும். கொரோனாவுக்கான சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை மற்றும் பாசிட்டிவிட்டி ரேட் 10%க்கு கீழ் குறைந்தால் சில தளர்வுகளை அளிப்பது குறித்து அரசு ஆலோசிக்கும்.

மூன்றாவது அலை பரவலை மனதில் கொண்டு அரசு எச்சரிக்கை அணுகுமுறையை கையாளும் எனவும் இறுதி முடிவு என்ன என்பதை முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவிப்பார் எனவும் ராஜேஷ் தோப் கூறினார்.

வாரக்கணக்கில் மகாராஷ்டிரா நாட்டிலேயே அதிகப்படியான பாசிட்டிவிட்டி ரேட்டை பதிவு செய்து வந்தது, இருப்பினும் தற்போது 15% கீழ் பாசிட்டிவிட்டி ரேட் உள்ளது. நேற்று (சனிக்கிழமை) பாசிட்டிவிட்டி ரேட் மேலும் குறைந்து 12% கீழ் சென்றுள்ளது.

கொரோனா தொடர்பான தரவுகளை நேற்று மத்திய அரசுத்துறை அதிகாரிகள் வெளியிட்டனர். அதன்படி மகாராஷ்டிரா உட்பட 8 மாநிலங்களில் தொற்றுக்காக சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்திற்கும் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதில் 5.14 லட்சம் பேருடன் கர்நாடகா முதலிடத்திலும், 3.67 லட்சம் பேருடன் மகாராஷ்டிரா 2ம் இடத்திலும், 3.06 லட்சம் பேருடன் கேரளா 3ம் இடத்திலும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாசிட்டிவிட்டி ரேட் 10% அதிகமாக உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை மகாராஷ்டிராவில் 23 ஆக உள்ளது. அந்த வகையில் தமிழகம் 37 மாவட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளது. கர்நாடகாவில் 29 மாநிலங்கள் உள்ளன.
Published by:Arun
First published: