முகப்பு /செய்தி /இந்தியா / செருப்பு வைப்பது தொடர்பாக பக்கத்து வீட்டுக்காரருடன் சண்டை.. கொலையில் முடிந்த விபரீதம்!

செருப்பு வைப்பது தொடர்பாக பக்கத்து வீட்டுக்காரருடன் சண்டை.. கொலையில் முடிந்த விபரீதம்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Crime news | செருப்பு வைப்பது தொடர்பாக இரு வீட்டாருக்கு இடையே நேர்ந்த சண்டை கொலையில் சென்று முடிந்த அதிர்ச்சி சம்பவம் மகாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Maharashtra, India

சிறிய விவகாரத்திற்காக பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட சண்டை கொலை குற்றமாக மாறிய அதிர்ச்சி சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் உள்ள நயா நகர் பகுதியில் வசித்தவர் 54 வயதான அப்சர் கதாரி. இவருக்கும் இவரது பக்கத்து வீட்டாருக்கும் எங்கே செருப்பை கழற்றி வைப்பது என்ற விஷயத்திற்காக சண்டை எழுந்துள்ளது. எங்கள் வீட்டு வாசல் பக்கத்தில் ஏன் செருப்பு வைக்கிறீர்கள் என்று இரு குடும்பமும் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளன.

இந்நிலையில், நேற்று இரவு அப்சருக்கும் பக்கத்து வீட்டாருக்கும் இதே விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு அது கை கலப்பாக உருவெடுத்துள்ளது. இதில் பக்கத்து வீட்டுகாரரும் அவரது மனைவியும் சேர்ந்து கொடூரமாக அப்சரை தாக்கியுள்ளனர். இதில் அப்சர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அப்சர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தம்பதி இருவர் மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறை பெண்ணை கைது செய்துள்ளது.

பெண்ணின் கணவர் தலைமறைவாக உள்ள நிலையில் அவரை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது. செருப்பை வைப்பது தொடர்பாக நடந்த சண்டை ஒரு உயிரை பலி வாங்கிய சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

First published:

Tags: Crime News, Maharashtra, Murder