சட்ட மேலவைக்கு போட்டியின்றி தேர்வாகிறார் உத்தவ் தாக்கரே...!

உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர முதல்வர்.

உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பொறுப்பேற்றதால் ஆறு மாதத்திற்குள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.

  • Share this:
    மகாராஷ்டிராவில் சட்ட மேலவைக்கு முதலமைச்சர் உத்தவ் தாக்கரே போட்டியின்றி தேர்வாகிறார்.

    மகாராஷ்டிராவில் தேர்தலை சந்திக்காமல் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பொறுப்பேற்றதால் ஆறு மாதத்திற்குள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.

    இந்நிலையில், சட்டமேலவையில் காலியான 9 இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், உத்தவ் தாக்கரே போட்டிடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத கூட்டணி சார்பில் 5 பேர் மட்டுமே போட்டியின்றி தேர்வாக வாய்ப்பிருந்த நிலையில், அக்கட்சிகள் தலா இரண்டு வேட்பாளர்களை அறிவித்ததால் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது.

    இந்நிலையில், சிவசேனா தரப்பில் விடுத்த கோரிக்கையை ஏற்று காங்கிரஸ் கட்சி இரண்டாவது வேட்பாளரை திரும்பப் பெறுவதாக அறிவித்ததால், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே சட்ட மேலவைக்கு போட்டியின்றி தேர்வாகிறார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see...
    Published by:Vinothini Aandisamy
    First published: