கொரோனா தடுப்பூசி... பிரதமருக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் கடிதம்

உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் கூடுதலாக 1.5 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்க வேண்டும், 25 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட அனுமதிக்க வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்

 • Share this:
  மகாராஷ்டிராவில் கூடுதலாக 1.5 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்க வேண்டும், 25 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட அனுமதிக்க வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

  மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. அத்துடன், கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

  அதன்படி, தற்போது 45 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

  இதில், “மகாராஷ்டிராவில் கூடுதலாக 1.5 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ் வழங்க வேண்டும். மகாராஷ்டிராவில் மும்பை, புனே, தானே, நாசிக், அவுரங்காபாத், நாக்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

  Must Read :  கொரோனா 2ஆவது அலை: அடுத்த 4 வாரங்கள் நெருக்கடியானவை - சுகாதாரத்துறை அமைச்சகம்

   

  கொரோனா தொற்று இளம் தலைமுறையினரை அதிகம் பாதிப்பது கவலை அளிக்கிறது. எனவே, மாநில அரசு தொற்று நோயை கட்டுப்படுத்த கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது. கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த 25 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
  Published by:Suresh V
  First published: