முகப்பு /செய்தி /இந்தியா / செயினை பறிக்க முயன்ற இளைஞர்.. இழுத்து பிடித்த மூதாட்டி.. அடித்து துரத்திய சிறுமி!

செயினை பறிக்க முயன்ற இளைஞர்.. இழுத்து பிடித்த மூதாட்டி.. அடித்து துரத்திய சிறுமி!

சிசிடிவி காட்சி

சிசிடிவி காட்சி

Chain snatch cctv | சாலையில் சென்ற மூதாட்டியிடம் வழி கேட்பது போன்று செயினை பறிக்க முயன்ற இளைஞரை சிறுமி ஒருவர் சரமாரியாக தாக்கி துரத்தினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Maharashtra, India

மகாராஷ்டிராவில் மூதாட்டியின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற கொள்ளையனைச் சிறுமி ஒருவர் அடித்துத் துரத்திய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் கடந்த 25ஆம் தேதி புனே நகரில் மூதாட்டி ஒருவர் தனது பேத்தியுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், மூதாட்டியிடம் வழிகேட்பது போலப் பேசி அவரது கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி கொள்ளையனைத் தடுக்க முயன்றபோது, அவரது 10 வயது பேத்தி கையிலிருந்த பையைக் கொண்டு கொள்ளையனைத் தாக்கத் தொடங்கினார். இதையடுத்து கொள்ளையன் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இதுதொடர்பான சிசிடிவி காட்சி இணையதளத்தில் வேகமாகப் பரவியதை அடுத்து போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

First published:

Tags: CCTV, Chain Snatching, Maharashtra, Theft