’சாதி அடிப்படையிலான குடியிருப்புப் பகுதிகளின் பெயர்கள் மாற்றம்’ - மஹாராஷ்ட்ர அமைச்சரவை அதிரடி முடிவு..

உத்தவ் தாக்ரே

சாதி பெயர் உள்ள இடங்களின் பெயர்கள் மாற்றப்படவுள்ளதாக மகாராஷ்ட்ரா அமைச்சரவை அதிரடி முடிவு எடுத்துள்ளது.

 • Share this:
  சாதி அடிப்படையிலான குடியிருப்புப் பகுதிகள் மற்றும் இடங்களின் பெயர்களை மாற்ற மகாராஷ்ட்ர அரசு முடிவு செய்துள்ளது. சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் யார் மீதும் பாகுபாடு காட்டக்கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

  இது குறித்து புதன்கிழமை நடந்த மகாராஷ்ட்ர மாநில அமைச்சரவை கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சாதிய பெயர்களில் இருந்த தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் பகுதிகளின் பெயர்கள் தற்போது மாற்றி அமைக்கப்பட உள்ளன. சாதிப்பெயர்களுக்கு பதிலாக சுதந்திர போராட்ட வீரர்கள், சமூக சீர்திருத்தவாதிகளின் பெயர்களை வைக்கவும் அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

  Also read: ஆன்லைன் தேர்வுகள் சாத்தியமில்லை.. எழுத்து மூலமாக தான் பொது தேர்வு - சிபிஎஸ்இ இயக்குநர்

  தமிழக எதிர்க்கட்சி தலைவரான மு.க. ஸ்டாலின் இந்த முடிவை வரவேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து மாநிலங்களிலும் இந்த வகையான மாற்றங்கள் பரவலாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், மராட்டிய மாநிலத்தில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு மேற்கொண்டுள்ள இந்த முடிவை பெரியார் மண்ணிலிருந்து - கலைஞரின் உடன்பிறப்பாக இதயப்பூர்வமாக வரவேற்றுப் பாராட்டி மகிழ்கிறேன் என்று கூறியுள்ளார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Rizwan
  First published: